தீர விசாரிப்பதே மெய்… கமலுக்கு பிரதீப் பிறந்தநாள் வாழ்த்து!

Published On:

| By Manjula

பிக்பாஸ் வீட்டைவிட்டு சமீபத்தில் வெளியேறிய நடிகர் பிரதீப் ஆண்டனி, நடிகர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற போட்டியாளர்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தது பிரதீப் ஆண்டனி வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றுவார் என்று தான்.

ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல வலிமையான போட்டியாளராக அறியப்பட்ட பிரதீப் ஆண்டனியை உள்ளிருந்த போட்டியாளர்களின் பேச்சைக்கேட்டு பிக்பாஸ் கடந்த சனிக்கிழமை இரவு வெளியே அனுப்பி வைத்து விட்டார். இதற்கான எதிர்வினையாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பிரதீப் பெயர் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 7) பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமலுக்கு, பிரதீப் ஆண்டனி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதில், சத்தியமா சொல்றேன் உங்களோட பெரிய ரசிகன் நான். உங்களுடைய 69-வது பிறந்தநாளுக்கு என்னுடைய வாழ்த்துகள். சினிமாவிற்கு நீங்கள் அளித்த கலை மற்றும் பங்களிப்பு மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. லவ் யூ என்று தெரிவித்திருக்கிறார்.

வீடியோவில் இவர் எக்ஸிட் கொடுக்கிறாராம் எனக்கு என்னும் வசூல்ராஜா பட வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த பதிவின் கீழ் நல்லா இருங்க, தீர விசாரிப்பதே மெய் என்னும் ஹேஷ்டேக்குகளை அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

பிகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு முழு விவரங்கள் வெளியீடு!

ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைஃப்… தொடரும் DeepFake அட்டூழியங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share