பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் ஆண்டனி மீண்டும் செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதற்கு அவர் மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 6 சீசன்களை விடவும் இந்த பிக்பாஸ் சீசன் தான் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. பெரும்பான்மையான சீசன்களில் ஆண்களின் கை ஓங்கியிருந்த நிலையில் இந்த சீசனில் பெண்கள் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக மாயா, ஐஷு, பூர்ணிமா, ஜோவிகா போன்றோர் தொடர் சண்டைகளால் பிக்பாஸ்க்கு நல்ல கண்டெண்ட்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்வாரா? என தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரதீப் தற்போது வீட்டுக்குள் மீண்டும் செல்ல முடியாது என்பதை ட்வீட் செய்து தெரிவித்துள்ளார்.
Game over.
#RenduKaiRenduKaalIllanaKoodaKaalindravanPozhaichupaanSir #KettaPaiyanSirAvan #VaazhthiyaManagalukkuEnVaazhkaiyaiVazhangiVitten #NallaIrunga pic.twitter.com/zr86c3H7Bo— Pradeep Antony (@TheDhaadiBoy) November 11, 2023
ரசிகர்கள் ஆதரவால் மீண்டும் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து கண்டிஷன்கள் எல்லாம் போட்டு, பிரதீப் வாய்ப்பு கேட்டிருந்தார். அதற்கு அவர் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை போல.
அதனால் கேம் ஓவர் என்ற கேப்ஷனுடன் ’ரெண்டு கை ரெண்டு கால் இல்லேன்னா கூட பொழைச்சுக்குவேன், கெட்ட பையன் சார் அவன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன், நல்லா இருங்க’ என்று ஹேஷ்டேக்குகள் போட்டு இதை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சதுரங்க ஆட்டத்தில் ராஜாவை சிப்பாய்கள் சேர்ந்து வீழ்த்துவது போல படம் ஒன்றையும் பிரதீப் பகிர்ந்துள்ளார். இதனால் அவரது பிக்பாஸ் ரீ-எண்ட்ரிக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சிறையில் காவல்துறையினர் என்னை மிரட்டினர்: அமர்பிரசாத் ரெட்டி
BiggBossTamil7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவர் தான்!