கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறினார். ஆனால் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. ரசிகர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் பிரதீப் குறித்த பேச்சாகவே இருக்கிறது. அவர் வெளியில் செல்ல யார் காரணம்? என புல்லி கேங் மாயா குழுவினருக்கும், விசித்ரா குழுவினருக்கும் இடையே எக்கச்சக்க அனல் பறக்கும் சண்டைகள் நடந்து வருகின்றன.
கடந்த ஞாயிறில் இருந்தே (நவம்பர் 5) பிக்பாஸ் வீட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சண்டைகள் கொடிகட்டி பறந்து வருகின்றன. இந்த நிலையில் தான் மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் நீங்கள் இதையெல்லாம் செய்ய வேண்டும் என நிகழ்ச்சியை நடத்தும் எண்டோமோல் சைன் நிறுவனத்தை டேக் செய்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
Romba sarpana pullingala ala dhan adhu mudiyum 🔥@EndemolShineIND if you are considering sending me in, I want two red cards to send off 2 contestants who conspired against me and I want to be the Captain – 7th week of BB7 ⭐
https://t.co/MhTwRzhT0E#PaathuSeinga #GamerLife— Pradeep Antony (@TheDhaadiBoy) November 10, 2023
தன்னுடைய பதிவில் அவர், ரொம்ப ஷார்ப் ஆன புள்ளைங்களால மட்டும் தான் அது முடியும் என கேப்ஷன் கொடுத்து பதிவு செய்திருக்கிறார். அதில் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால் எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை வெளியில் அனுப்ப 2 ரெட் கார்டுகள் கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி 7-வது வாரத்தில் என்னை கேப்டனாக ஆக்க வேண்டும் என கண்டிஷன்கள் போட்டிருக்கிறார்.
If you give me a good game, I'll give you a great show 🎈@EndemolShineIND@vijaytelevision@ikamalhaasan
I promise, I'll also behave. Oru intermission mudichuttu vara padothoda revenge mode second half madhiri aduren. https://t.co/g0saIPiDat#PaathuSeinga
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 10, 2023
மேலும் நீங்க எனக்கு ஒரு நல்ல ஆட்டத்தை கொடுத்தால் நான் என்னுடைய் சிறந்த ஷோவை காட்டுவேன் என்றும், ஒரு இடைவேளைக்கு பின்னர் வரும் படத்தோட இரண்டாவது பாதி போல என்னோட ஆட்டம் செம ரிவெஞ்ச் ஆக இருக்கும் எனவும் தன்னுடைய அடுத்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த பதிவுகளால் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடையா?