பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாவார்கள். முதல் சீசனில் ஆரவ்-ஓவியாவில் ஆரம்பித்த இந்த காதல் தற்போது 7-வது சீசனிலும் தொடர்ந்து கொண்டுள்ளது. போன சீசன்களில் எல்லாம் போட்டியாளர்களில் விதிவிலக்காக ஒரு ஜோடி தான் காதல் செய்து சுற்றி கொண்டிருக்கும்.
ஆனால் இந்த சீசனில் அது தலைகீழாக மாறியுள்ளது. நிக்சன்-ஐஷு இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் நெருங்கி பழகிய நிலையில் ஐஷு வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அதனால் தற்போது நிக்சன் சிங்கிள் பையன் ஆக சுற்றிக்கொண்டு உள்ளார். ஆனால் மணிச்சந்திரா-ரவீனா இடையே ஒரு டிராக் ஓடிக்கொண்டு இருக்கிறது.
தற்போது இந்த காதல் பட்டியலில் லேட்டஸ்ட் ஆக விஷ்ணு-பூர்ணிமா ஜோடி இணையும் போல தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இருவரும் மாயாவின் தயவால் காதல் வயப்படும் சூழல் உருவானது. ஆனால் இது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. என்றாலும் பூர்ணிமா மீது தனக்கு ஒரு சாப்ட் கார்னர் இருப்பதை விஷ்ணு அவ்வப்போது வெளிக்காட்டி வந்தார்.
இந்த நிலையில் இன்று வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் விஷ்ணு-பூர்ணிமா இருவரும் நெருங்கி அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதில் விஷ்ணு, “எங்க வீட்ல எந்த பொண்ண சொன்னாலும் கட்டி வைப்பாங்க” என பூர்ணிமாவிடம் சொல்கிறார். பதிலுக்கு பூர்ணிமா “இப்ப பேசின மாதிரியே நீங்க இருந்தா ஓகே. எனக்கு ஒரு பீலிங் இருக்கு அதுபத்தி பேசலாம்” என்று கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆஹா வீட்டுக்குள்ள அடுத்த காதல் ஜோடி உருவாகிடுச்சு போல என கிண்டலடித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சட்டமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக? – அப்பாவு விளக்கம்!
விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லன் யார்?