பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக விஜய் வர்மா, அனன்யா ராவ் இருவரும் வீட்டுக்குள் வந்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினுஷா தேவி பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்த வாரம் வீட்டின் கேப்டனாக இருக்கும் நிக்சன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும், வினுஷாவிடம் மன்னிப்பு கேட்க போவதாக சபதம் எடுத்துள்ளார். வீட்டின் கார்டனில் அவரும், சரவண விக்ரமும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
#Nixen : Nan pannadhu romba periya thappu.
Velila poi #Vinusha akka kaal la vilundhu manippu keka poren!#BiggBossTamil7 #BiggBossTamil
pic.twitter.com/0FlqXW1ese— Akshay (@Filmophile_Man) November 26, 2023
அப்போது நிக்சன், ”நான் பேசுனது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் போல. அதை பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டாங்கனு நெனச்சேன். ஆனா அவங்க அப்படி நெனைக்கல. நடந்த எந்தவொரு விஷயத்தையும் நம்மால மாத்த முடியாது. ஆனா வெளில போனதும் அவங்க கால்ல விழுந்தாவது மன்னிப்பு கேட்க போறேன்,” என கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவ இதைப்பார்த்த ரசிகர்கள், நடிப்புல நீங்க உலக நாயகன் கமலையே மிஞ்சிருவீங்க போல என கிண்டலடித்து வருகின்றனர். வினுஷா தேவி குறித்து நிக்சன் கிண்டல் செய்ததை பிக்பாஸ் போட்டு கொடுக்க, அதற்கு வினுஷா தன்னுடைய தரப்பில் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
துருவ நட்சத்திரம் டிசம்பர் 08 ஆம் தேதி ரிலீஸ்?
இன்னும் 3 மாதத்தில் திமுக கூட்டணி உடையும்: ஜெயக்குமார் உறுதி!