biggbosstamil7 nikshans comment against on women

‘பொறந்தப்பவே கள்ளிப்பால் கொடுத்து’ நிக்ஸனின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை!

சினிமா

பொறந்தப்பவே கள்ளிப்பால் கொடுத்து கொன்னுருக்கணும் என பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்ஸன் அடித்த கமெண்ட், தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரம் 8 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருப்பதால் இவர்களில் இருந்து யார் வெளியேறுவார்கள்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் நிக்ஸன் அடித்த கமெண்ட் ஒன்று அவருக்கு எதிராக மாறியிருக்கிறது.

அந்த வீடியோவில் ரவீனா, விசித்ராவுடன் அமர்ந்து நிக்ஸன் பேசிக்கொண்டு இருக்க, மற்ற போட்டியாளர்கள் கிச்சனில் நின்று சமைத்து கொண்டுள்ளனர். அப்போது சாப்பாடு லேட்டாவதாக பேச்சு எழ, பதிலுக்கு நிக்ஸன், ”நான் அங்க இருந்தா சீக்கிரம் முடிஞ்சிருக்கும்.

இதுக்கு தான் பொறந்தப்பவே இவள கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்கணும். இந்தளவு வந்து நின்றுக்குமா?” என கேஷுவலாக சொல்கிறார். அருகில் இருந்த விசித்ராவும், ரவீனாவும் அவரின் இந்த கமெண்டை கேட்டு விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர்.

இதைப்பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் கள்ளிப்பால் பத்தி பேசுறாரு, கேட்டுட்டு ரெண்டு பேரும் சிரிக்கறாங்க. கண்டிப்பா கமல் சார் இதை பத்தி விசாரணை செய்யணும் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

biggbosstamil7 nikshans comment against on women

மற்றொரு தரப்பினரோ நிக்ஸன் பேசுவதை வைத்து பார்த்தால் பெண்களில் அர்ச்சனாவும், பூர்ணிமாவும் தான் இப்போது குக்கிங் டீமில் இருக்கிறார்கள். கண்டிப்பாக பூர்ணிமா குறித்து நிக்ஸன் இப்படி கமெண்ட் அடிக்க மாட்டார். ஆக அவர் சொன்னது அர்ச்சனாவை தானா? என ஆதாரங்களுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனால் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக சமூக வலைதளங்களில் மாறியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிக்ஸன் அடித்த இந்த கமெண்ட் குறித்து கமல் கேள்வி எழுப்புவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய 5 டிப்ஸ்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *