பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று (டிசம்பர் 11) நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், அனன்யா, நிக்ஸன் மற்றும் விஷ்ணு விஜய் என 6 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேறலாம் என கூறப்படுகிறது. அதாவது இதுவரை டபுள் எவிக்ஷன் ஆக இருந்தது.
தற்போது டிரிபிள் எவிக்ஷன் ஆக மாறவிருக்கிறதாம். இதை வாரயிறுதி நிகழ்ச்சியின் போதே கமல்,” வீட்ல நெறைய பேரு இருக்கீங்க. எனக்கு பசிச்சா மூணு முட்டை கூட போட்டு சாப்பிடுவேன், ” என சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இந்த வாரம் அது உண்மையாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றனவாம். இதுகுறித்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் பாத்திமா பாபுவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இது நடந்தால் கூல் சுரேஷ், நிக்ஸன், அனன்யா மூவரும் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லும் பிக்பாஸ் இந்த வாரம் டிரிபிள் எவிக்ஷன் என்னும் திருவிளையாடலை நிகழ்த்துவாரா? என்பதை நாம் வழக்கம் போல பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
QR Code பரிவர்த்தனை செய்கிறீர்களா? – உங்களுக்கான எச்சரிக்கை இதோ!
ராஜஸ்தான் முதல்வராக முதல்முறை எம்.எல்.ஏ தேர்வு!