பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, அனன்யா ராவ், கூல் சுரேஷ், சரவண விக்ரம், மணி சந்திரா மற்றும் ஜோவிகா என 8 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்து இருந்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார்? என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.
குறிப்பாக அக்ஷயா, ஆர்ஜே பிராவோ என ஒரு டபுள் எவிக்ஷனுக்கு பிறகான வாரம் என்பதால் இந்த வாரம் சிங்கிள் எவிக்ஷனா? இல்லை டபுள் எவிக்ஷனா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதற்கிடையில் கூல் சுரேஷ் அல்லது சரவண விக்ரம் இருவரில் ஒருவர் வெளியேறலாம்? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் சிங்கிள் எவிக்ஷன் தான் என்று தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி வீட்டுக்குள் இளம் போட்டியாளராக வலம் வந்த ஜோவிகா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த ஜோவிகா ஆரம்பத்தில் இந்த விளையாட்டை நன்றாக ஆடினார்.
என்றாலும் நாட்கள் செல்லச்செல்ல மிகவும் அமைதியான போட்டியாளராக மாறிவிட்டார். குறிப்பாக தன்னுடைய பகல் தூக்கத்தால் பிக்பாஸ் வீட்டில் அதிக நாட்கள் நாய் குலைத்ததற்கு காரணமாக இருந்தவர் ஜோவிகா என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
‘பொறந்தப்பவே கள்ளிப்பால் கொடுத்து’ நிக்ஸனின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை!