நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய நண்பன் என்று, பிக்பாஸ் போட்டியாளர் விஷ்ணு விஜய் சொன்னது பொய் என தெரிய வந்துள்ளது.
விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டுக்கு சென்றார். பிக்பாஸ் வீட்டின் செல்லக்குட்டி என்பதால் ஹரிஷ் ஒருநாள் உள்ளே தங்குவதற்கு, பிக்பாஸ் அனுமதி அளித்தார். வீட்டைவிட்டு வெளியேறும் முன் அவர் உள்ளே கொண்டு சென்ற ஸ்டாரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அளித்தார்.
இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டுக்குள் மணி, விஷ்ணு இருவரும் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மணியிடம், விஷ்ணு, ”ஹரிஷ் என் பிரண்டு அதனால் தான் ஸ்டார் கொடுத்தாரு” என கூறுகிறார். பதிலுக்கு மணி ஆச்சரியமாக விஷ்ணுவை பார்க்க, அவர் கெத்தாக சிரிக்கிறார்.
https://t.co/LQqQv6W9qm pic.twitter.com/mDhRPas01N
— Harish Kalyan (@iamharishkalyan) November 30, 2023
இந்த நிலையில் வீடியோவை பார்த்த ஹரிஷ் , ”ஷப்பா முடியல டா ” என மீம் போட்டு விஷ்ணுவை கிண்டல் செய்துள்ளார். இதன் மூலம் விஷ்ணு, ஹரிஷை தன்னுடைய பிரண்ட் என சொன்னது பொய் என்று ஆகிவிட்டது. இதைப்பார்த்த ரசிகர்கள், ‘என்ன இப்படி பொசுக்குன்னு அடிச்சிட்டீங்க’ என்று ஹரிஷ் கல்யாணை பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
வேலைவாய்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி!
பருத்திவீரன் சர்ச்சை: இயக்குனர் சங்கம் மெளனம் ஏன்? – கரு பழனியப்பன் விளாசல்!