BiggbossTamil7: வாராவாரம் இதைத்தானே செய்றோம்? ஒப்புக் கொண்ட புல்லி கேங்!

Published On:

| By Manjula

BiggBossTamil7  Bully gang

ஒவ்வொரு வாரமும் நாங்கள் செய்வது இந்த வேலையை தான் என பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள ‘புல்லி கேங்’ ஒப்பு கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் ? என்பது தான் தற்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்.

அதற்கு ஏற்றவாறு இந்த வார நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, அர்ச்சனா, பூர்ணிமா, ஐஷு, ஆர்ஜே பிராவோ ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். பூர்ணிமா, ஐஷு இருவரில் யாராவது வெளியேறினால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.

ஆனால் ஆர்ஜே பிராவோதான் வெளியேறப் போகிறாரோ என்பது போல அவரது செயல்பாடுகள் உள்ளன. எந்த ஒரு ப்ரோமோ வீடியோக்களிலும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதே தெரியவில்லை. அந்தளவுக்கு எந்த ஒரு நிகழ்விலும் பங்கு பெறாமல் வெறும் பார்வையாளராகவே இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று வெளியான பிக்பாஸின் 4-வது ப்ரோமோவில் தினேஷ், மாயா இருவருக்கும் முட்டிக் கொண்டுள்ளது.

பில்களை வைத்து டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுக்க அதை மறைத்து வைத்து ‘புல்லி கேங்’ என அழைக்கப்படும் மாயா குழுவினர் விளையாடி உள்ளனர்.

இதனால் தினேஷ் கேள்வி கேட்க பதிலுக்கு மாயா நாங்க கமல் சார்கிட்ட பேசிக்கிறோம் என்று கெத்தாக சொல்கிறார்.

பின்னர் தனியாக மாயா, பூர்ணிமா, ஐஷு, ஜோவிகா உள்ளிட்டோர் அமர்ந்து பேசுகையில் வார இறுதியில் கமல் சார் நம்மள கழுவி ஊத்த போகிறார் என மாயா சொல்ல, பதிலுக்கு பூர்ணிமா, ’ஒவ்வொரு வாரமும் நாம அவர்கிட்ட மன்னிப்பு கேட்குற வேலையை தானே பண்றோம்? அதானே நம்ம வழக்கமே…” என கேஷுவலாக கூறுகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கமல் சார் இந்த நிகழ்ச்சியால உங்க பேரும் சேர்ந்து கெடுது என ஆதங்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் இந்த வாரயிறுதி எந்த வாரமும் இல்லாத அளவுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்… புதிதாக விண்ணப்பித்தால் ஆதார் இணைக்கப்படுமா?

டப்பிங் படங்களுடன் தீபாவளி கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

திடீர் வாக்கெடுப்பு: எம்.பி. மஹூவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share