பிக்பாஸ் வீட்டில் சமீபகாலமாக நல்ல கன்டென்ட் எதுவும் கிடைக்காமல் பிக்பாஸ் திணறி வருகிறார். இதனால் மீண்டும் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என வீடு இரண்டாக பிரிந்து போட்டியாளர்கள் அடித்துக்கொள்ள இருக்கின்றனர். ஆனால் அதுவரை என்ன செய்வது என தெரியாத பிக்பாஸ், போட்டியாளர்களுக்குள் சண்டை மூட்டிவிட தற்போது ஓவர்டைம் வேலை செய்து வருகிறார்.
ஆனால் அவரது பிளான்கள் எல்லாமே ஓபனிங் நன்றாகவும் பினிஷிங் மொக்கையாகவும் முடிந்து விடுகின்றன. இந்த நிலையில் பிக்பாஸ் எதிர்பார்த்தது போல, வீட்டுக்குள் தற்போது மீண்டும் சண்டைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. அர்ச்சனா கெட்டு போவதற்கு காரணம் விசித்ரா தான் என நிக்ஸன் சொல்ல, பதிலுக்கு ஐஷு வெளில போனதுக்கு நீ தானே காரணம் என அர்ச்சனா நேருக்கு நேராக கேட்கிறார்.
மற்றொரு ப்ரோமோவில் வீட்டில் கன்டென்ட் கொடுக்காத இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூற அனைத்து போட்டியாளர்களும் அர்ச்சனா, விசித்ரா இருவரையும் குறிப்பிடுகின்றனர். சொல்ல போனால் இதன் மூலம் இருவரையும் பிரித்து விட்டனர் போல. இதனால் ஆத்திரமடைந்த விசித்ரா இனிமே என்னோட பார்ட் 2 வெர்ஷனை எல்லாரும் பார்ப்பீங்க என சபதம் எடுக்கிறார். இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீடு ரணகளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
’நூலகம்’: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்!
அண்ணா பல்கலை தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு: மாணவர்கள் அதிர்ச்சி!
Election2023: ம.பி, சத்தீஸ்கர்: மதியம் வரை வாக்கு சதவிகிதம் எவ்வளவு?