பெண்கள் பாதுகாப்பு தான் காரணமா?: பிரதீப்புக்கு சப்போர்ட் செய்த கவின், சினேகன்

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வலிமையான போட்டியாளராக அறியப்பட்ட பிரதீப் ஆண்டனி நேற்று (நவம்பர் 4) நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், விசித்ரா, மாயா, ஐஷு, நிக்சன், விஜய் வர்மா, மணிசந்திரா, அக்ஷயா, பவா செல்லத்துரை, யுகேந்திரன், பூர்ணிமா, விஷ்ணு என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

இதில் அக்ஷயா, யுகேந்திரன், பவா செல்லத்துரை, விஜய் வர்மா நிகழ்ச்சியை விட்டு வெளியேற தினேஷ், கானா பாலா, ஆர்ஜே பிராவோ, விஜே அர்ச்சனா, அன்னபாரதி என வைல்டு கார்டு போட்டியாளர்கள் கடந்த வாரம் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன் இந்த வாரம் நிகழ்ந்துள்ளது. இதில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து நேற்று (நவம்பர் 4) அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து இன்றிரவு (நவம்பர் 5) அன்னபாரதி வீட்டைவிட்டு வெளியேறும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இந்த நிலையில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட விஷயம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அவரை வெளியே அனுப்பியதை விடவும் பெண்கள் பாதுகாப்பு கருதி அவரை வெளியே அனுப்புவதாக கமல் சொன்னது தான் இதற்கெல்லாம் காரணம். ஐஷுவிடம் எப்போது பார்த்தாலும் ஒட்டி, உரசியபடி திரியும் நிக்சன் மற்றும் பொது மேடையில் பெண் தொகுப்பாளினியிடம் அநாகரீமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ் ஆகியோரை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு பிரதீப்பை பெண் பாதுகாப்பு என சொல்லி வெளியே அனுப்பி இருக்கிறீர்களே? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பிரதீப் வீட்டுக்குள் நடந்து கொண்ட முறைக்கு அவரை வெளியே அனுப்பியது சரி தான் என்றாலும், பெண் பாதுகாப்பு என்ற வார்த்தையை தூக்கிப்பிடிக்க என்ன காரணம்? இது அவரது சொந்த வாழ்க்கை மற்றும் சினிமா வளர்ச்சி ஆகிய இரண்டையும் பாதிக்கும் என்பது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு தெரியாதா? என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதற்கிடையில் பிரதீப்புக்கு ஆதரவாக நடிகரும், அவருடைய நண்பனுமான கவின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நீ யாரென்று தெரியும் நண்பா,” என சபரிமலை செல்லும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதேபோல முதல் சீசன் போட்டியாளரும், மக்கள் நீதி மையம் கட்சியின் உறுப்பினரும், கவிஞருமான சினேகன், ”இதுவும் கடந்து போகும்” என கவிதை ஒன்றை வெளியிட்டு பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

வீட்டை விட்டு வெளியே வந்த பிரதீப்பும் தனக்கு பிக்பாஸ் வீட்டில் கிடைத்த விருதுகளை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார். தொடர்ந்த ரசிகர்களின் ஆதரவால் எக்ஸ் தளத்தில் பிரதீப்பின் பெயர் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

இன்று பவுலராக வருகிறாரா விராட் கோலி?: ராகுல் டிராவிட் சூசகம்!

வேகக் கட்டுப்பாடு மீறல்: முதல் நாளில் 121 வழக்குகள்… ரூ.1.21 லட்சம் அபராதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *