விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் விதிப்படி வாரம் ஒரு டாஸ்க் நடத்தப்படும்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த புரோமோ இன்று (அக்டோபர் 18 ) வெளியாகி உள்ளது.
கதை சொல்லும் நேரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கதை சொல்ல வேண்டும்.
அவர்கள் சொல்லும் கதை பிற ஹவுஸ்மேட்ஸை கவர வேண்டும். அதுமட்டுமின்றி கதையை முழுவதுமாக சொல்லி முடிப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் கதை சொல்ல செல்லும் அசீம், தனது சொந்த வாழ்க்கை பற்றியும், தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தது பற்றியும் பேசுகிறார்.
அவர் ஒருபுறம் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்க, அது தங்களுக்கு பிடிக்கவில்லை என நடிகைகள் ரச்சிதா, மகேஸ்வரி, சாந்தி ஆகியோர் அடுத்தடுத்து வந்து பஸ்ஸரை அமுக்கி அவரை எலிமினேஷனில் இருந்து தப்ப விடாமல் செய்கின்றனர்.
பின்னர் இதை நினைத்து கண்ணீர் விட்டு அசீம் அழும் காட்சிகளும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
அதேபோல், அடுத்ததாக கதை சொல்ல செல்லும் ஜனனி, நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைப்பீர்கள் ஆனால் அப்படியெல்லாம் இல்லை, நான் படித்துகொண்டிருக்கும் போதே வீட்டை பார்த்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக கூறுகிறார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, தங்களுக்கு பிடிக்கவில்லை என விக்ரமன்,ஆயிஷா ஆகியோர் அடுத்தடுத்து வந்து பஸ்ஸரை அமுக்கி அவரை எலிமினேஷனில் இருந்து தப்ப விடாமல் செய்கின்றனர்.
இதற்கு முந்தைய சீசன்களில் இந்த டாஸ்க் நடக்கும் போது வீடே கண்ணீர் கடலில் மிதக்கும். அதேபோல் இந்த சீசனிலும் இந்த வாரம் முழுக்க இந்த டாஸ்க் நடைபெற இருப்பதால், என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வெள்ளை வேட்டி கட்டுனதுக்கு ஒரு மதிப்பு கிடைச்சிருக்கு: ஜி.பி முத்து
டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்து வெற்றி… முன்னிலையில் நெதர்லாந்து!