பிக் பாஸ் 8 ; வைல்டு கார்ட் எண்ட்ரி தரும் பிரபலங்கள் !

Published On:

| By Sharma S

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் – 8 கடந்த சீசன்கள் தந்த பரபரப்பை ஏற்படுத்த தவறினாலும், விஜய் சேதுபதியின் எதார்த்தமான தொகுத்து வழங்கும் முறைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பே கிடைத்துள்ளது. ஒரு பக்கம் விஜய் டிவியின் பிரபலங்களை மட்டுமே வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி என்கிற விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்தாலும் கடந்த சில நாட்களாக சுவாரஸ்யமாகவே நகர்கிறது இந்த சீசன்.

நடிகை ஸ்வாகதா

இந்த நிலையில், அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கும் வைல்டு கார்டு எண்ட்ரிக்களைக் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவல் மற்றும் சமூக வலைதளங்களில் பரவப்படும் தகவல்களின் அடிப்படையில் சில பிரபலங்கள் வைல்டு கார்டு எண்ட்ரீ தர வாய்ப்புள்ளது.

அதன் அடிப்படியில், இந்த சீசனில் கடந்த வாரம் எவிக்ட் ஆன நடிகர் அர்னவின் முன்னாள் மனைவியும் சீரியல் நடிகையுமான திவ்யா வீட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. அர்னவிற்கும் இவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது.

நடிகர் டி.எஸ்.கே

 

மேலும், திவ்யா காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அர்னவ் சிறை செல்லவும் நேர்ந்தது. இவர்களின் பிரிவிற்கு காரணம் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருக்கும் நடிகை அன்ஷிதா தான் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இவர்கள் பேசிக்கொள்ளும் தொலைப்பேசி உரையாடல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆக, திவ்யா வீட்டிற்குள் சென்றால் அன்ஷிதாவிற்கும் இவருக்கும் இடையே சண்டை முட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

நடிகை ஷாலின் சோயா

இவரைத் தவிர்த்து, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் எனக் கருதப்பட்ட ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷாலின் சோயா, சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்ற விஜய் டிவி புகழ் டி.எஸ்.கே, பிக் பாஸ் சீசன் 7 – யின் போட்டியாளரான நடிகை மாயாவின் சகோதரியும் பின்னணி பாடகியுமான ஸ்வகதா , நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரி தர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வைல்டு கார்டு எண்ட்ரி வருகிற தீபாவளி ஸ்பெஷலாக நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா

– ஷா

 

ராணுவ வீரர்கள் கொண்டாடும் ‘அமரன்’ !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment