லைஃப்டைம் செட்டில்மெண்ட்: அர்ச்சனாவுக்கு கிடைக்கப்போகும் மொத்த பணம் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Manjula

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு, கிடைக்கப்போகும் பரிசுத்தொகை மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் இன்று இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இன்று (ஜனவரி 14) மாலை 6 மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடுவார்.

இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னராக மணிசந்திராவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மாயா 3-வது இடத்தினை பிடித்துள்ளார்.

தினேஷ் இரண்டாவது இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்பதால் பிக்பாஸ் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் போகும் போது, அர்ச்சனா எடுத்துச் செல்லவிருக்கும் பணம் மற்றும் பரிசுத்தொகை குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

பிக்பாஸ் வீட்டில் நாளொன்றுக்கு அர்ச்சனா ரூ.2௦ ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். வீட்டில் மொத்தம் 77 நாட்கள் இருந்திருக்கிறார்.

அதன்படி பரிசுத்தொகை ரூ.5௦ லட்சம் அதோடு சம்பளமாக ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் என, 65 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்து செல்வார்.

மேலும் ஜி ஸ்கொயர் வழங்கும் ரூ.15 லட்சம் மதிப்பிலான பிளாட் ஒன்றும் அர்ச்சனாவிற்கு கிடைக்கும். இப்படி அனைத்தையும் கூட்டி பார்த்தால் சுமார் 80 லட்சம் மதிப்பிலான பணம் + பரிசுத்தொகையுடன் தான் அவர் வீட்டிற்கு செல்கிறார்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்!

எல்லா புகழும் உங்களுக்கே… ஆளுயர மாலையுடன் சென்ற அயலான் இயக்குநர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel