இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு… பிக்பாஸ் யார் யார் போட்டியாளர்கள்?

சினிமா

விரைவில் பிக்பாஸ் 8வது சீசன் நடக்க போகிறது. இதுவரை, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்போது, அவர் அரசியல் பக்கம் ஒதுங்கி விட, இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். இதற்கான ,வெளியான ப்ரோமோவில் இந்த வாட்டி ஆளும் புதுசு.,.. ஆட்டமும் புதுசு என்று விஜய் சேதுபதி கூறும் வகையில் அமைந்துள்ளது.

இந்த முறை வி.டி.வி கணேஷ், சுனிதா கோகய், அன்ஷிதா அக்பர்ஷா, ரவீந்தரன், ரஞ்சித், பப்லு பிரீதிவிராஜ், அருண் பிரசாத், பரினா ஆசாத், பவித்ரா ஜனணி, அமலா ஷாஜி உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர்.

முன்னதாக பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் கூட போட்டியாளர்களாக வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், இவர்கள் 3 பேரும் பங்கேற்கவில்லை.

இப்போது, பிக்பாஸ் குறித்த மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த வீடியோவை விஜய் டிவியே தன்னுடைய  வெப்சைட்டில் பதிவிட்டுள்ளது. ரெடி ரோல் என்ற வார்த்தையுடன் ஷூட்டிங் தொடங்குகிறது.

அப்போது, ஆடம்பரமான கார் ஒன்றில் விஜய் சேதுபதி ஸ்டைலாக வந்து இறங்குகிறார். எல்லோருக்கும் வணக்கம்” வைத்துக்கொண்டே செட்டுக்குள் விஜய் சேதுபதி செல்கிறார்.

பிக்பாஸ் சீசன் தொடங்குகையில், கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார். ஒவ்வொரு முறையும், அந்த வீட்டில் புதுமையாக என்ன செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி பார்வையிட்டு கொண்டே, நேயர்களுக்கும்  விளக்குவார்.

அதுபோலவே, விஜய் சேதுபதியும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவது போலவும், கேமராவில் பேசுவது போலவும் காட்சிகள் வைக்கப்படுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அரசியல் மற்றும் பட வேலைகள் காரணமாக அவர் விலகிக் கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 தவெக கொடியில் யானை சின்னம் : பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதில்!

முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர் மனு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *