பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அன்ஷிதா!

சினிமா டிரெண்டிங்

நாள் 27 : எந்த வித வறுவல்களும் இல்லாது இருந்த இந்த வார வீக் எண்ட் எபிசோட் நமக்கு சற்று ஏமாற்றம் தான். ஆனால், இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் வறுவல்களுக்கு விசே லீவ் விட்டிருக்கலாம். ஆனால் நாளைய எபிசோடில் நிச்சயம் சில குறுக்கு விசாரணைகளை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

குறிப்பாக வைல்டு கார்டு எண்ட்ரி நடைபெறவுள்ளதால் ஆட்டத்தில் பல திருப்பங்களும் நடக்கக்கூடும். சரி பெரிதாக கண்டெண்ட் இல்லாவிடினும் குறிப்பிட வேண்டிய, விமர்சிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கவே செய்தது.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுடன் தொடங்கிய இன்றைய எபிசோடில் ஆண்கள் அணியினரான விஷால், சத்யா, தீபக் போன்றோர் ஜாக்குலின் பற்றியும் சவுந்தர்யா பற்றியும் புரணி பேசிக்கொண்டிருந்தனர். அந்த கேங்கைப் பொறுத்தவரை அவர்கள் புதிதாக கோபம் வந்த சிட்டி ரோபோக்கள்.

‘மச்சான் இப்போ தான் மச்சான் புரியுது..!’ ‘மச்சான் எல்லாரும் மைண்டு கேம் ஆடுறாங்க டா..!’ என இவர்கள் சமீப காலமாக இவர்கள் பேசுவதைப் பார்க்கும் போது ரமணா திரைப்படத்தில் யூகி சேது சொல்வது போல் ‘இதையே இப்போ தான் கண்டுபிடிக்கிறீங்களா டா..?’ என்றே சொல்லத் தோன்றியது.

அதைத் தொடர்ந்து, அணியில் இருக்கும் அனைவரையும் அழைத்து ஒரு டாஸ்க் தர இந்த வார கேப்டனான முத்துக்குமரன் அழைக்க…, அதில் வி.ஜே.விஷால் வர கொஞ்சம் தாமதமாக்க.., ‘நீங்க வரவே வேண்டாம் விஷால்!’ என முத்துக்குமரன் சொன்னது தேவையில்லாத சீனாகவே தெரிந்தது. இன்னும் சொல்லப் போனால் அது ஒரு ஃபாசித்தின் அடையாளமாகத் தெரியவில்லையா..? அட இந்த ஃபாசிசம்ங்கிற வார்த்தை தற்போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருவதால் அதை விடுவோம். ஆனால், அது வழக்கமாக முத்துக்குமரன் செய்யும் ஒரு வகை சீன் என்பதே நமது தாழ்மையான கருத்து.

அதற்குப் பின்னர் விசே எண்ட்ரி தந்தார். அனைவரையும் நலம் விசாரித்தார், பாராட்டினார், ‘ஆமா தானே’ என்கிற வார்த்தையை வைத்தே ஒரு அரை மணி நேரம் எபிசோட் ஓடியது. பின்னர் இந்த வாரம் நடந்த கூடு விட்டு கூடு பாயும் டாஸ்க் குறித்து ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸிடமும் கேட்டார். குறிப்பாக சவுந்தர்யா போல சிறப்பாக நடித்துக் காட்டிய ஆனந்தியைப் பாராட்டினார்.

’சவுந்தர்யா பண்ணது என்ன இரிட்டேட் பண்ணுச்சு’ என சுனிதா சொல்ல.., ’நான் பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரியே இருக்குற மாதிரி முத்துக்குமரன் செஞ்சி காமிச்சத நான் ஒத்துக்க முடியாது!’ என முதல்முறையாக பளிச் என ரஞ்சித் கூறிய போது ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்தைத் தாண்டி ‘ராஜமாணிக்யம்’ ரஞ்சித்தையே லேசாக பார்த்தது போல் இருந்தது. அப்படி ஒரு ரஞ்சித்தை முழுதாக அந்த வீட்டில் யாரும் பார்த்ததில்லை. இனியாவது அதை முழுதாக காண்பிப்பார் என நம்புவோம்.

அதற்குப் பின்னர் அந்த கல்யாண மாலை டாஸ்கில் நடந்த கியூட் குறும்புகள் குறித்து விசே கேட்பதாய் கண்டெண்ட் உருண்டோட , அப்படியே இந்த எபிசோடை நிறைவு செய்துவிட்டார் விசே. இந்த சீசனின் வீக் எண்ட் எபிசோட்களிலேயே சுவாரஸ்யம் மிக கம்மியாக போன எபிசோட் இது தான். ஆமாம் தானே?

ஆனால் கடைசியில் இந்த வாரம் இரண்டு போனஸ் உள்ளது என அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரி குறித்து ஒரு க்ளுவை தந்துவிட்டு சென்றார்.

நமக்கு கிடைக்கப்பட்ட தகவல் படி இந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக ஆறு பேர் வீட்டிற்குள் செல்ல உள்ளனராம். என்னது ஆறு பேரா? என நீங்கள் கேட்பதை இதை எழுதும் போதே என் காதுகளுக்கு நன்றாகவே கேட்கிறது. இந்த சீசன் மிக மொக்கையாக போகிறது. ஆமா தான..? இப்படியே போனால் டிஆர்பி சரிந்தே போகும். ஆமா தான? இவங்கள வைச்சி ஒரு கண்டெண்டும் எடுக்க முடியலங்கிறது இந்த நாலு வாரத்துல தெரிஞ்சிருச்சு. ஆமா தான? அதற்கு தான் இந்த வைல்டு கார்டு எண்ட்ரி.

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது அன்ஷிதா என்கிற செய்தி பல மீம் கிரியேட்டர்களுக்கு ஷாக்கிங்காக இருக்கும். ஆம், ‘பொண்ணுங்க ஜிங்க ஜிங்க ..பொண்ணுங்க ஜங்க ஜங்கா..’ ‘இஷ்டம் வில்லா’, ‘இரிட்டேட் உருட்டேட் தருட்டேட்’ போன்ற மீம் டெம்பிளேட் வாக்கியங்களை இனி வீட்டிற்குள் கேட்க முடியாதே என்கிற சோகம் தான் நமக்கும்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரயில் மோதி நான்கு தமிழகத் தொழிலாளர்கள் பலி: பாலக்காடு பயங்கரம்!

சாக்லேட் ஆசை: மூன்று வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

ஹெல்த் டிப்ஸ்: ஜாக்கிங்கைவிட சைக்கிளிங் நல்லதா… ஏன், எப்படி?

பியூட்டி டிப்ஸ்: தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அனைவருக்கும் ஏற்றதல்ல!

டாப் 10 நியூஸ் : விஜய் அவசர ஆலோசனை முதல் வெற்றியை நோக்கி இந்தியா வரை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *