பிக் பாஸ் 8 : வன்மத்தை கக்கிய தர்ஷா – அட்வைஸ் செய்த சேதுபதி

சினிமா டிரெண்டிங்

இந்த வார கேப்டன்சி எப்படி இருந்தது? எனத் தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடின் வழக்கத்திற்கு மாறாக, பிபி ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கிலிருந்து தொடங்கியது  நேற்றைய (27.10.24) எபிசோட்.

பெரும்பாலான பிக்பாஸின் வழக்கங்ககளை விசே உடைப்பது இந்த சீசனில் நாம் பல முறை குறிப்பிட்ட ஒன்று தான். இருந்தாலும் எப்படி பால் போட்டாலும் சேஃப் கேம் விளையாடும் இந்த சீசன் ஹவுஸ்மேட்ஸின் (பெண்கள் அணியையும் சேர்த்துத் தான்) ஆட்டத்தை சேது அண்ணாவால் கூட உடைக்க முடியவில்லை.

பாவம்! கன்டென்டிற்காக அதிகம் கஷ்டப் பட்டது சேது அண்ணாவாகத் தான் இருக்கும். அது இருக்கட்டும்! பிபி ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் யாராவது பெர்சனலாக டார்கட் செய்தார்களா என விசே கேட்க, ஹவுஸ்மேட்சின் அமைதி அவர்களின் சேஃப் கேமை அப்பட்டமாக்கியது.

இவர்களை திருத்த முடியாது என பிக்பாஸ் குழுவின் வேறு ஒரு முயற்சி தான், நாம் புரொமோவில் பார்த்த மேனேஜர், ஹெல்ப்பர், கஸ்டமர் டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் தங்கள் அணிக்குள் அதிகாரமாக வேலை வாங்குபவரை மேனேஜர், சுயமாக சிந்திக்காதவரை ஹெல்ப்பர், விடுமுறைக்கு வந்தது போல் ஜாலியாகத் திரிபவரை கஸ்டமர் என வகைப்படுத்த வேண்டும்.

இதில் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் வெளிப்படையாக சொல்லுங்கள் என பலமுறை விசே சொன்ன பின்பும் சிலர் டிப்ளமேட்டிக்காக இருந்ததை காண முடிந்தது. வகைப்படுத்த முடியாமல் திணறியது, தயக்கமாக பூசி மொழுவியது,

பெரும்பாலமானவர்கள் ஜெஃப்ரியை சொன்னது என ஆண்கள் அணி ஒருபுறமும், வன்மத்தை தெளித்தது, சுனிதா அழுதது, அதுமட்டுமில்லாமல் வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அணியிலும் சில ஒன்றுபட்ட கருத்துகள் என இரு அணிகளும் எப்படியோ இழுத்து அந்த டாஸ்க்கை முடித்தனர் ஒரு வழியாக. ஒரு வேலை பெண்கள் அணி இரண்டு பட்டு விட்டதோ? இந்த கேள்வி வருவதற்கு மற்றொரு காரணம் சவுந்தர்யா, தர்ஷா மற்றும் சாச்சனா கூறும் அந்த 6 பேர் கொண்ட குழு தான்.

உண்மையில் அப்படி ஒரு குழு இருப்பதாக நமக்கு தெரியவில்லை. ஒருவர் முடிவு எடுத்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரானது, வாக்கு முறையில் மெஜாரிட்டி எடுத்தால் குரூப்பிஸம், சரி எல்லோரும் பேசினால் ஒரு முடிவுக்கு வராமல் வாய்ப்பை தொலைப்பது.. இதில் அனைத்திலும் சவுந்தர்யாவின் பி.ஆர் டீம் அவருக்கு ஹெவியான வேலை பார்க்கிறதோ என்கிற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அவருக்கு மட்டும் வரும் கைத்தட்டு எப்போதும் கொஞ்சம் அதிகம் தானோ? எனவே தோன்றும்.

Image

நம் பிரச்சனை அவருக்கு கைதட்டல் கிடைப்பது அல்ல. அவரைத் திட்டினால் கூட கைதட்டல் வருகிறது, அவர் ஒன்றுமே செய்யாது இருந்தால் கூட முதல் ஆளாக சேவ் ஆவார். அதுவே நம் சந்தேகத்தை அதிகரிக்கிறது. என்ன தான் பி.ஆர் டீமா இருந்தாலும் வீகெண்ட் எபிசோட் செட்டப் ஆடியன்ஸ் வரையா இறங்கி ஆள் செட் செய்வது..? சரி, வாழ்க ஜனநாயகம் !

சரி இந்த வார எவிக்ஷனிற்கு வருவோம். நாம் அறிந்தது தான், தர்ஷா இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். ஸேவ் செய்யும் பொழுது சற்று கண்கலங்கிய முத்துகுமரன் கொஞ்சம் புதுசு தான். தர்ஷா வெளிவரும் போது சாச்சனா ‘நான் உன்ன ஸேவ் (நாமினேஷன் ஃப்ரீ பாஸ்) பன்ன சொன்னேன்க்கா அவுங்க தான் கேக்கல’ என அழுதது கொஞ்சம் நெறுடலாக தான் இருந்தது. அது சாச்சனாவின் முதிர்ச்சி இல்லாதத் தன்மையை மேலும் வெளிப்படையாக காட்டியது.

வெளியே வந்த தர்ஷா ஒரு லோ பட்ஜட் அர்னவாகவே பெண்கள் அணியிடம் பேசினார். குறிப்பாக சுனிதாவை ஏளனமாக பேசியது, ஆனந்தி மற்றும் பவித்ராவிடம் பேசாமலே போனது ஒரு கோழைத்தனமான செயலாகவே நம்மால் பார்க்க முடிந்தது. வீட்டிற்குள் இதில் எதையும் காட்டாமல் ஸேஃபாய் விளையாடிவிட்டு எவிக்ட் ஆன பின் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் ரசிக்கும் படி இல்லை. இதைத்தான் விசேவும் சொன்னார்.

ஆக தர்ஷாவின் எவிக்ஷன் ‘அந்த 6 பேர் கொண்ட குழுவின் சதி ‘ என தர்ஷா சொல்லிவிட்டு போக, அது பெண்கள் அணியினரை சற்று சல சல வைத்தது. பெண்கள் அணியில் இனி முடிவுகள் வேறு வழியில் எடுக்கப்படுமா? முதல் வாரத்தைப்போல் அடித்துக் கொள்வார்களா மீண்டும்?
விசேவிடம் சரமாரியாக வாங்கிக் கட்டிய ஆண்கள் அணி, இனியாவது தனித்து விளையாடுவார்களா? என்ன நடக்கிறது என்று வரும் வாரத்தில் பார்ப்போம்!

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

பாதாள சாக்கடையில் மூழ்கியவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் பலி!

ஹெல்த் டிப்ஸ்: உணவில் புளியை அதிகம் சேர்த்துக்கொள்வது ஆபத்தா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஃபைனான்சியல் அனலிஸ்ட் படிப்பு: சேருவது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *