நாள் 16 : பிக் பாஸ் வீட்டில் எதுக்கு வேக்கப் டான்ஸ்? அதை யாரேனும் கேட்டார்களா..? என நாமும் நமது விமர்சனங்களில் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த கொடுமைக்கு வேக்கப் டேன்ஸே பரவா இல்ல பா…, என சொல்ல வைத்தது பிக் பாஸ் சொன்ன புதிய வேக்கப் சாங் டாஸ்க். பிக் பாஸ் வீட்டுக்குள் சாங் என்றால் அது மூன்றாவது சீசன் தான்!
முதல் நாளில் பெண்கள் அணி கொடுத்த வாக்கு, அதாவது ஒரு வாரம் ஆண்களை நாமினேஷன் செய்ய மாட்டோம் என ஒரு சிங்கிள் கார்ட் பெட்டுக்காக அடமானம் வைத்த வாக்கு. அது தான் இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டெண்டாக உள்ளது.
இன்று, ஆண்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சாச்சனாவிற்கு வயிற்று வலி வர, அன்பிற்கே அன்பு சொல்லித் தரும் நமது அருண் அவரை கன்ஃபசன் ரூம் வரை கூட்டிச் செல்ல, இது தான் டா சான்ஸ் என ’நீங்க கன்ஃபசன் ரூமுக்கு வந்தீங்கல அப்போ நாங்க கொடுத்த வாக்கும் செல்லாது.!’ என ஆனந்தி வகுத்த திட்டம் படி பெண்கள் அணி கொடி தூக்க…, அதற்கான வாக்குவாதம் இரு அணிக்கும் இடையே நடந்தது.
‘கொடுத்த வாக்குறுதிய மீறுரீங்க…!’ என நேக்காக கேர்ள்சை சென்சிடிவான பாய்ன்டை வைத்து முத்துக்குமரன் மடக்க முயற்சி செய்தார். ஏம்பா.. மனசாட்சி படி பிக் பாஸ் விளையாடக் கூடாதுன்னு சொல்ற நீங்க, வாக்குறுதி படி மட்டும் விளையாடலாமா..? என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. அந்த டீலின் முடிவை நாளை சொல்வதாக கேர்ள்ஸ் அணி தள்ளி வைத்துள்ளனர். நம்மைப் பொறுத்தவரை பிக் பாஸ் ரூல்ஸில் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் பெண்கள் அணியினர் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.
இன்றைய டாஸ்காக ‘ஸ்டார் ஹோட்டல்’ டாஸ்க் பிக் பாஸால் அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் வீடே ஸ்டார் ஹோட்டலாக மாற வேண்டும். அதில், இன்றைக்கு பெண்கள் அணி ஸ்டார் ஹோட்டல் நிர்வாகமாகவும், ஆண்கள் அணி விருந்தினராகவும் இருக்க வேண்டும். விருந்தினரை சரியாக கவனிக்கத் தவறினால் ஸ்டார் ஹோட்டல் மேலாளர் பதவி இறக்கப்படுவார்.
இந்த டாஸ்கில் ஆண்கள் அணி கேட்ட ‘புல்ஸ் ஐ’ என்கிற டபுள் முட்டை ஆஃப்பாயிலை பெண்கள் அணி தர தவறியது. மேலும், விருந்தினரைச் சரியாக கவனிக்கவில்லை என்கிற குற்றசாட்டை ஆண்கள் அணி வைக்க, மேலாளரான பவித்ராவிற்கு பதவி இறக்கம் நடந்தது. அது பவித்ராவை பாதித்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
அடுத்ததாக நடத்தப்பட்ட இந்த வார நாமினேஷன் ஃப்ரீக்கான முதல் டாஸ்க் தான் இந்த எபிசோடின் ஹைலைட். ஒரு விதத்தில் சர்ச்சையும் கூட. ‘கில்லர் காயின்’ என்கிற இந்த டாஸ்க் ஏற்கனவே சீசன் 3யில் வழங்கப்பட்ட ஒரு டாஸ்க் தான். ஆனால், இந்த முறை முத்துக்குமரன் போட்ட வன்முறை திட்டம் அந்த ஆட்டத்தின் தன்மையையே மாற்றியது.
அதாவது அந்த டாஸ்கின் படி, ஒரு காயினை எதிர் அணியைச் சார்ந்த ஒரு நபர் மீது ஒட்ட வேண்டும். பஸர் அடிக்கும் போது காயின் யார் மீது உள்ளதோ அவர் வெளியேற்றப்படுவார். நியாயப்படி ஓடி பிடித்து காயினை ஓட்டி விளையாட வேண்டிய இந்த டாஸ்கை கும்பலாக சென்று ஒரு பெண்ணை டார்கெட் செய்து மடக்கி பிடித்து கபடி விளையாடிய ஆண்கள் அணியின் ஸ்ட்ராடஜி மிக பலவீனமானது.,
கமல் ஹாசன் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு. ‘எதிரியின் பலத்தோடு மோத வேண்டும், பலவீனத்தோடு அல்ல’ என்று. இன்று அப்படியான ஒரு செயலைத் தான் ஆண்கள் அணியினர் செய்தனர். இதில் தர்ஷிகா மீது கும்பலாக விழுந்தது, சவுந்தர்யாவை தீபக் இறுக்கிப் பிடித்த செயல் எல்லாம் வன்முறையாக, நெருடலாகவே தெரிந்தது.
இந்த ஆட்டத்தில் தர்ஷா தெரியாமல் ரஞ்சித்தின் அந்தரங்க பாகத்தை மிதித்து விட்டாராம். உடனே, ‘எந்த ஒரு ஆம்பளையையும் அந்த இடத்துல அடிக்கக் கூடாது’ என அருண் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்ததைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. இதேபோன்ற ஒரு வாக்கியத்தை பெண்கள் அணியினர் சொல்லியிருந்தால், என்னவாகியிருக்கும்? இதை கொஞ்சம் கூட ஆண்கள் அணி ஏன் யோசிக்கவில்லை என்பது புரியவில்லை. இது குறித்து கண்டிப்பாக விசே வீக் எண்டில் கேட்பார் என நம்புவோம்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: எட்டிப்பார்க்கும் நரை முடியைப் பிடுங்காதீர்கள்!
ஹெல்த் டிப்ஸ்: டயட் இருக்க விரும்புகிறீர்களா… உங்களுக்கு ஏற்றதுதானா?
டாப் 10 நியூஸ் : சீன அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு முதல் ‘அமரன்’ ட்ரெய்லர் ரிலீஸ் வரை!