பிக்பாஸ் வீட்டில் தற்போது மாயா, அர்ச்சனா, விஷ்ணு விஜய், தினேஷ், மணி சந்திரா மற்றும் விஜய் வர்மா என மொத்தம் 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதில் இந்த வாரம் மிட் எவிக்ஷன் முறையில் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற இருக்கிறார். இதனால் வீட்டில் 5 போட்டியாளர்கள் மிஞ்சுவர்.
இவர்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர், ரன்னராக தேர்வு செய்யப்படுவர்.
இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ரூபாய் 5௦ லட்சம் பணத்துடன், பல்வேறு விளம்பரதாரர்களின் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி வருகின்ற ஜனவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
இதையடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் 5 தினங்களே இருப்பதால், பழைய போட்டியாளர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் அந்த போட்டியாளர் யாராக இருப்பார்? என்பதை அறிய நாம் வரும் ஞாயிறு வரை காத்திருக்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பஸ் ஸ்ட்ரைக்: ஓட்டுநர் மீது தாக்குதல்!
நான்கு வயது மகனைக் கொன்று… நாடகமாடிய பெண் அதிகாரி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!