விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக , விக்ரமனை பார்த்து அசீம் போடா , வாடா என்று அநாகரிகமாக பேசியது மற்றும் ஆயிஷாவை போடி என்று சொன்னது போன்ற செயல்கள் நடந்தது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் இன்று (அக்டோபர் 22 ) வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன், ‘தப்பை தட்டி கேட்க தானே நாம இருக்கோம்’ என்று மிரட்டலாக பேசியிருக்கிறார்.
இந்த வாரம் பல பிரச்சனைகள் நடந்த நிலையில் கமல்ஹாசன் எந்த தப்பை தட்டிக் கேட்கப் போகிறாரோ என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
ப்ரோமோவில் மட்டும் இவ்வளவு பில்டப் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியில் எதுவும் இல்லாமல் செய்து விடக்கூடாது.
அப்படியே அசீம் மற்றும் விக்ரமன் பிரச்சனையை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும், அசல் கோலார் பெண்களிடம் நடந்து கொள்வது சரியான முறையில் இல்லை இவர் எப்போதும் பெண்களிடம் சில்மிஷம் செய்து வருகிறார். அடுத்ததாக அசல் கோலார் மற்றும் தனலட்சுமி இடையே பிரச்சனை வெடித்தது.
இதில் அசல் கோலார் தனலட்சுமியை உருவ கேலி செய்து பெரியம்மா, ஆன்ட்டி என்று கூப்பிடுவதாக கோபத்தில் தனலட்சுமி சண்டை போட்டார். இந்த பஞ்சாயத்து வீட்டிற்குள் தற்போது வரைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசினால் நன்றாக இருக்கும் என்று சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்கள் கூறி வந்தனர்.
தற்போது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கமலும் இன்றைய முதல் ப்ரோமோவில் படபடவென மிரட்டலாக சரவெடியை வெடித்துக் கொண்டிருக்கிறார்.
இது எல்லாம் எடுபடுமா? இல்லை மழையில் நனைந்த பட்டாசு போல் அப்படியே நமத்து போய்விடுமா? என்பது இன்றைய எபிசோட்டில் தெரியும்.
’தப்பு பண்றவங்களுக்கு தான் செய்றது தப்பு என்று தெரியாதவர்களுக்கு தட்டிக் கேட்க தானே நாம இருக்கோம் ’ என்று கமல் கூறுவதைப் பார்த்து நிகழ்ச்சிக்கு ஆர்வம் கூடி இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஸ்ருதிஹாசனின் நிறைவேறிய ஹாலிவுட் கனவு!
56 வயதில் 23 வயது பெண்ணுடன் திருமணம்: நடிகர் பப்லு சொல்லும் விளக்கம்!