புதிய படமொன்றில் ஹீரோவாக நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டதாக, நடிகர் பிரதீப் ஆண்டனி தெரிவித்து இருக்கிறார்.
‘அருவி’, ‘வாழ்’, ‘தடா’ படங்களில் நடித்த பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்து கொண்டார். இறுதிப்போட்டி வரை சென்று கோப்பை வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அவர்மீது நிலவியது.
ஆனால் எதிர்பாராத விதமாக ரெட் கார்டு வாங்கி நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறினார். தொடர்ந்து பிக்பாஸ் தொடர்பான நிகழ்ச்சி எதற்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இது அவருக்கு நெகட்டிவாக அமைவதற்கு பதிலாக நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மையான வின்னர் பிரதீப் ஆண்டனி தான் என, ரசிகர்கள் இந்தியளவில் அடிக்கடி ட்ரெண்ட் செய்யும் அளவுக்கு பிரதீப் அவர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.
இந்த நிலையில் புதிய படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி இருப்பதாக காசோலையை பகிர்ந்து, பிரதீப் ஆண்டனி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
https://twitter.com/TheDhaadiBoy/status/1756274733799338310
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” இந்த வருஷம் நடிச்சு கொஞ்சம் காசு சம்பாதிச்சுக்கலாம்னு அட்வான்ஸ்லாம் வாங்கிட்டேன். படம் பொறுமையா தான் வரும். எப்போ வரும்னுலாம் கேட்காதீங்க. முடிஞ்சா தியேட்டர்ல பாருங்க. அன்புக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.
பிரதீப் ஆண்டனியின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான விஷயமாக மாறியுள்ளது. தற்போது ரசிகர்கள் பிரதீப்பின் புதிய படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவையை நடுநிலையுடன் வழிநடத்திய ஓம் பிர்லா: பாராட்டிய மோடி