பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார்? என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
பிக்பாஸ் வீட்டில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை புரிந்து வருகின்றனர்.
இதனால் நீண்ட நாட்களுக்கு பின் வீட்டில் தற்போது லேசாக மகிழ்ச்சி எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் வின்னர் என அழைக்கப்பட்ட சரவண விக்ரம் வெளியேறி இருக்கிறார்.
இந்த வாரம் நாமினேஷனில் சரவண விக்ரம், விசித்ரா, ரவீனா மூவரும் இடம் பெற்றனர். இதில் விசித்ரா வாக்குகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் இருந்தார்.
Bye Bye #SaravanaVickram #BiggBossTamil7 #BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 pic.twitter.com/SHdbdjqQGh
— BiggBoss Booster (@bb_booster) December 22, 2023
ரவீனா, விக்ரம் நடுவில் தான் வாக்குகள் மாறிக்கொண்டு இருந்தன. அந்த அடிப்படையில் ரவீனா தான் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரவீனா உறவினர் கொளுத்திப்போட்ட வெடிகளால் காலம் போன கடைசியில் டிஆர்பி-க்கு ஆசைப்பட்டு விக்ரமை பிக்பாஸ் வெளியேற்றி இருக்கிறார்.
இதற்கு மேல் மணி- ரவீனா இடையிலான உறவில் விரிசல் விழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தான் ரவீனாவை வீட்டில் தக்க வைத்து, விக்ரமை பலியாடாக மாற்றி விட்டனர்.
இதைக்கண்ட ரசிகர்கள் நியாயமாக ரவீனா தான் வீட்டில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என, பிக்பாஸ் குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் அதானே!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சென்னை வராதது ஏன்? – எங்களாலும் கேட்க முடியும் : நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதில்!
Video: இந்த பாட்டு போட்டா தான் வருவீங்களா?… தென் ஆப்பிரிக்க வீரரை கலாய்த்த கேப்டன்!