இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்!

சினிமா

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு ஐஷு வெளியேறிய நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

தீபாவளி என்றும் கருணை காட்டாமல் கடந்த வாரம் நாமினேஷன் சடங்கை ஸ்ட்ரிக்ட் ஆபிசராக பிக்பாஸ் பாலோ செய்தார். வழக்கம் போல போட்டியாளர்கள் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். முடிவில் பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, ரவீனா, மணி, அக்ஷயா, கானா பாலா மற்றும் சரவண விக்ரம் ஆகியோர்  இந்த நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

குறிப்பாக சரவண விக்ரம் இல்லையெனில் பூர்ணிமா இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருந்தது. இந்த நிலையில் கானா பாலா வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதுகுறித்த எபிசோட் நாளை இரவு (நவம்பர் 19) ஒளிபரப்பாகும். இதற்கு முன்னர் இரண்டு முறை டபுள் எவிக்ஷன் நிகழ்ந்ததால் இந்த வாரம் அதற்கு வாய்ப்பிருக்குமா? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

ஆனால் ஏற்கனவே கன்டென்ட் இல்லாமல் சிக்கி திணறி கொண்டிருப்பதால் இந்த வாரம் சிங்கிள் எவிஷன் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு பிக்பாஸ் வந்து விட்டார் போல. ஒரே எவிக்ஷனுடன் நிறுத்தி கொண்டு விட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

Bigg boss 7 Day 47: வீட்டின் முடிவை எதிர்த்து போராடும் விசித்ரா – அர்ச்சனா!

தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

+1
1
+1
4
+1
1
+1
2
+1
1
+1
3
+1
6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *