பல நாட்களாக கேமை ஸ்டார்ட் செய்யாமல் இருந்த அக்ஷயா முந்தைய எபிசோடில் நடந்த ஸ்டார் டாஸ்கில் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியை சில ஹவுஸ்மேட்ஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, குறிப்பாக மணி – ரவீனா ஜோடி மற்றும் கூல் சுரேஷ். ‘அவளுக்கு ஏன் இந்த ஸ்டார் குடுத்தாங்க’ என மணி – ரவீனா தனியாக பேசிக்கொள்கிறார்கள். இந்த சூழலை கொஞ்சம் கொளுத்திப் போட்டு கண்டெண்ட் கரக்கலாம் என பிக் பாஸ் கொண்டு வந்த புதிய டாஸ்க் தான் ‘சாபக் கல்’.
அதாவது, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்த சாபக் கல்லை கொடுக்க வேண்டும். அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அடுத்த வார எவிக்ஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாது ஸ்மால் பாஸ் வீட்டிற்கு தள்ளப்படுவார்.
ஆனால், இதை ஒரே டாஸ்கில் முடிக்காமல் 4, 5, முறை சுற்றவிட்டது பிக் பாஸ் டாஸ்க் டீம் உறுப்படியாக யோசித்து செய்த ஒரே விஷயம் எனச் சொன்னால் மிகையாகாது. அதன் படி இறுதியாக அந்தக் கல் அக்ஷயாவிடம் வந்து சேர்ந்தது. ‘நீ ஷூட்டிங்க்கு வந்த மாதிரி தான் மா இருக்க!’ ‘எண்ணெய் இல்லாம சப்பாத்தி கேக்குறமா’ என்பது போன்ற காரணங்களை அவரை நாமினேட் செய்ய கூல் சுரேஷ் சொன்னார்.
‘அந்த பொண்ணு டிக் டாக் பண்றதுலாம் பெருமையா’ என விசித்ராவிடம் தனியாக பேசுகையில் சொன்னார். அவர் கதையை இவர் சரியாக கூட கேட்கவில்லை போலும். ஆனால் நாம் அனைவரும் தற்போது சந்தோசப்பட வேண்டியது ‘லியோ’ ரிலீஸாகும் இந்நேரத்தில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதைக் குறித்து தான். பின்ன, ஏற்கனவே இந்த ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செயலிகள் படுத்திய பாடு போதாமல் தியேட்டரில் கூல் சுரேஷை வேற எப்படி பார்ப்பது?
இதற்கு பிறகு மாயா – விஜய்வர்மா காதலிக்கிறார்கள் என ஹவுஸ்மேட்ஸ் கலாய்க்க, ’எனக்கு கோவமே வரலயே, நான் ஃபீலே ஆவலயே கலாய்ச்சா கலாய்ச்சிக்கோங்க’ என மாயா இருந்தார். ஆனால் ஒரு இடத்தில், ‘எனக்கு அவன பிடிக்கும், ஆனா அது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல’ என்று மட்டும் அழுத்தமாக சொன்னார். ஆனால், இந்த மணி – ரவீனா செய்யும் கிரிஞ்ச் செயல்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று தான் தோன்றியது. அடுத்ததாக பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மதிப்பிட்டு அவர்களின் குணநலன்களைக் கூற வேண்டும் என பிக் பாஸ் புதிய டாஸ்க்ல் தந்தார்.
அதில் வழக்கம் போல சரியாக கணித்துப் பேசினார் பிரதீப். ஆனால், அயிஷாவை மதிப்பிடும் போது, ‘நீ என்ன ஒரு நாள் சார்ன்னு கூப்புடுற, ஒரு நாள் அண்ணான்னு கூப்புடுற அன்னைக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுக்குற’ நான் எப்படி புரிஞ்சிக்கிறதுன்னே தெரியலயே எனக் கூற, உடனே கொதித்த அயிஷா, ‘நான் விளையாட்டுக்கு தான் பண்ணேன்
இதை இன்னோரு தடவ சொல்லாதீங்க’ என கண்டித்தார். ஆனால், நாம் எவரும் கண்டுகொள்ளாத ஒரு விஷயத்தை சபையில் வைத்து சட்டென உடைத்து விட்டார் பிரதீப். இது போன்ற தந்திரங்களை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். பிரதீப்ணா மாஸ்ணா நீ! இப்படியாக இந்த எபிசோட் நிறைவடைந்தது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
– ஷா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
எப்போதும் இந்த 10 வீட்டு அழகுக் குறிப்புகளை மறந்துடாதிங்க!