பிக் பாஸ்: “நமக்குள்ள வரதுக்கு அவ யாரு” – கடுப்பான ரவீனா

Published On:

| By Monisha

ஆரிய மாலா…, ஆரிய மாலா…,ஆரிய மாலா…,இன்றைய எபிசோட் முடிந்தும் நம் காதுகளில் ரீங்காரம் போடுவது இந்த வார்த்தை தான். வேக்கப் நடனத்திற்கு பிறகு, வழக்கமாக கிச்சனில் ஆயிஷாவிடம் மாயாவைப் பத்தி பேச ஆரம்பிக்கிறார் விசித்ரா. “மாயா பல நேரம் காமெடிக்குன்னு பேசுறது ரொம்ப ஹர்ட் ஆகுது. ஆனா, அவ நல்ல பொண்ணு தான்” என சொல்ல.

அதை அப்படியே மாயாவிடம் சொல்கிறார் ஆயிஷா. பின், மாயாவின் திருமணம் பற்றி நேற்று பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறார் விசித்ரா. தான், சண்டை போட்டவர்களிடம் மிக எளிதில் சமரசம் அடைந்து இயல்பாக பேசுவது விசித்ராவின் வழக்கமாக உள்ளது.

இந்த ஒரு குணத்தை யுகேந்திரன் பாராட்டுகிறார். குறிப்பாக ஜோவிகாவுடன் நடந்த கருத்து வேறுபாட்டிற்குப் பிறகும் அதை புரிந்துகொண்டு கடந்து வந்தது பாராட்டக்குரியதே.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பிரதீப்பை பற்றி பேசுகின்றனர். வீட்டுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, ‘அவர் கேரக்டரயே புரிஞ்சிக்க முடியல’. ‘அவகிட்ட சொல்லாதன்னு சொல்லுங்க..!’ என ஆயிஷாவிடம் மணியை கூட்டி வந்து சொல்கிறார் ரவீனா.

அதாவது, நேற்று நிரூபணமான மணி – ரவீனா காதலை தனது வெகு ஆண்டுகளாக தெரிந்த ஆயிஷாவிடம் சொல்லிவிட்டார் மணி.

இப்போது பிரச்சனை என்னவென்றால், ‘மணி அண்ணா மாறிட்டார். இப்போலாம் முன்ன மாதிரி என்கிட்ட பேசுறது இல்ல’ என ஆயிஷா ஒருபுறம். ‘இவகிட்ட ஏன் சொன்னீங்க? இவ யாரு நமக்குள்ள வரதுக்கு?’ என ரவீனா மறுபுறம்.

இப்படியான ஒரு குளிர்போரே நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ’மணியை நான் லவ் பண்றேன்’ என ரவீனாவாலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. பிரதீப்பின் கேரக்டரை விட மிக குழப்பமானதாக இருப்பது இந்த இருவரின் காதல் தான்.

பின், விசித்ராவின் வழக்கங்களில் ஒன்றான கேமரா புலம்பல்கள் நடந்தேறுகிறது. ‘இந்த வீட்ல நடக்குறத, அந்த வீட்டுக்கு சொல்றது பூர்ணிமா தான். எல்லாரும் என்ன அம்மான்னு கூப்டுறதுலாம் நடிப்பு தான்.

இந்த வீட்ல வயசானவங்களோட பவர் என்னன்னு காட்றேன்’ என ஆடியன்ஸிடம் சபதம் எடுக்கிறார். இந்த எபிசோடின் முதல் டாஸ்கை பிக் பாஸ் அறிவிக்கிறார். அந்த டாஸ்கில் வினுஷா சரியாக விளையாடததால் ஹவுஸ்மேட்ஸின் ஆடைகள் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

லக்‌ஷுரி ஷாப்பிங் டாஸ்காக ஒரு புது விதமான டாஸ்க்கை கொடுத்தார் பிக் பாஸ். எனக்கு தெரிஞ்சி இந்த சீசனின் டாஸ்க் டீம் உருப்படியாக கொடுத்த ஒரு டாஸ்க் இது தான்.

தலை சுற்றவைக்கவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அறைக்குள் மூன்று ஹவுஸ் மேட்ஸ் இருக்க வேண்டும். உள்ளே எந்த விதமான இடையூறுகள் இருந்தாலும் அந்த அறையை விட்டு வெளியே வரக் கூடாது. இதுவே அந்த டாஸ்க்.

அதில், தாங்கள் எப்படியாவது ஸ்கோர் செய்ய வேண்டுமென முன் வந்தவர்கள் விசித்ரா, யுகேந்திரன், ரவீனா. ஆனால், அந்த அறைக்குள் வேறெதுவும் செய்யாமல் ‘ஆரியமாலா’ எனும் பழைய பாடலை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்தது, நிச்சயம் பார்வையாளர்களுக்கே தலை சுத்தியிருக்கும். ஆனால், அத்தனையும் தாண்டி 4 மணி நேரம் அந்த ஒலியை மனவலிமையோடு கேட்டு அந்த டாஸ்கை வெற்றி பெற்றனர் விசித்ரா, யுகேந்திரன் மற்றும் ரவீனா.

பின், பிரதீப் மீதான தனது வன்மத்தை நேரடியாகவே கேமராவில் கொட்டுகிறார் மாயா. ‘பிக் பாஸ் இவரை தயவு செஞ்சி அனுப்பி விடுங்க!’ என்கிறார். ‘இவனுக்கு மட்டும் ஆடியன்ஸ் கை தட்டுனாங்கன்னா, நான் அதோட கேம விட்டு வெளிய போயிருவேன்’ என்கிறார்.

பாவம், அந்த கூட்டம் அஜீமிற்கே கைதட்டிய கூட்டமென மாயாவிற்கு தெரியாது போலும். இந்த வாரம் பிக் பாஸால் அரெஸ்ட் வாரண்ட் அளிக்கப்பட்ட வினுஷா, அக்‌ஷயா மீதான வாரண்ட் கேன்சல் செய்யப்படுகிறது. ரவீனா – மணி – ஆயிஷா இடையேயான பஞ்சாயத்து முடிவில்லாமல் நீளுகிறது.

ஒரு கட்டத்துக்கு மேல், இதுவரை நாம் எவரும் பார்க்காத ஒரு ரவீனாவாக கோபம் கொள்கிறார். நிச்சயம் இந்த குளிர் போர் பெரிதாக வெடிக்குமென்பது திண்ணம்.

– ஷா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: பாம்பே கார டோஸ்ட்

ரொம்ப உக்கிரமான ஆள இருப்பாரோ?: அப்டேட் குமாரு

Bigg Boss Tamil 7 13th October 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel