பிக்பாஸ் சீசன் 6 ன் இன்றைய 2வது புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ஆயிஷா, விக்ரமன் உள்ளிட்டோருடன் அசீம் அநாகரிகமாக நடந்து கொண்டது பிக் பாஸ் ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
இந்நிலையில், அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், போட்டியாளர்களை வைத்தே கமல்ஹாசன் ரெட் கார்டுகளை கொடுக்க வைத்துள்ளார்.
ரேங்கிங் டாஸ்க்கில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர்ளை விட்டு விட்டு 9வது இடத்தில் இருந்த ஆயிஷாவிடம் அசீம் அத்துமீறி நடந்து கொண்டது பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் ரொம்பவே அப்செட் ஆக்கியது.
பெண் போட்டியாளர்களை பார்த்து அப்படி தான் டி போட்டு பேசுவேன் என்று அசீம் எகிறிக் கொண்டு வர, கொஞ்சமும் பயம் கொள்ளாமல், என்கிட்டேயே எகிறியா என செருப்பை கழட்டி காட்டி சரியான பதிலடி கொடுத்து விட்டார் ஆயிஷா.

இதனிடையே, கமல் வந்து தட்டிக் கேட்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தற்போது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், அசீம் செய்தது தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஸ்டோர் ரூமில் இருந்த ரெட் கார்டுகளை கொண்டு வந்து இதை யாருக்கு கொடுக்க விருப்பப்படுறீங்க? என கமல் கேட்கிறார்.
இதற்கே காத்திருந்த மாதிரி ஒவ்வொரு போட்டியாளரும் எழுந்து வந்து அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்கின்றனர்.
அதன் படி அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா இல்லை அவரை தீபாவளியை காரணம் காட்டி அசீம் மன்னிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேபோல், டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு பாதியிலேயே வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அசீம், அசல் கோலார் செய்யும் சேட்டை: தப்பை தட்டி கேட்பாரா கமல்?
”நீங்களா! எனக்கு வேண்டவே வேண்டாம்!”: மணமகள் கொடுத்த விளம்பரத்தால் அதிர்ச்சி!