பிக் பாஸ் வெற்றி: அசீம் சொன்ன பஞ்ச்!

சினிமா

முயற்சிக்கு முன்னால் வருகிற தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வருகிற மயக்கமும் ஒரு மனிதனின் முன்னேற்றத்தை தடுத்து விடும் என்று பிக் பாஸ் சீசன் 6-இல் வெற்றி பெற்ற அசீம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியின் துவக்கத்திலிருந்தே பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தபடி அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவருமே இறுதி போட்டியாளர்களாக இருந்தனர்.

அசீம் அல்லது விக்ரமன் இவர்களில் ஒருவர் தான் கோப்பையை வெல்வார்கள் என்று பேச்சுக்கள் எழுந்தது. அதன்படியே இவர்கள் இருவருக்குமிடையே போட்டி நிலவியது.

இதில் விக்ரமனை விட அதிக வாக்குகள் பெற்று அசீம் வெற்றி கோப்பையை தன் வசப்படுத்தினார்.

கோப்பையை பெற்ற பிறகு அசீம் பேசியபோது, “நான் பிக் பாஸ் வந்தபோது என்னுடைய சக போட்டியாளர்களிடம், 14 வாரமும் என்னை நாமினேட் பண்ணுங்கள். நான் இறுதிப் போட்டிக்கு வருவேன். மக்கள் மற்றும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினேன். அதனுடைய தீர்ப்பு தான் இந்த வெற்றி. முயற்சிக்கு முன்னால் வருகிற தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வருகிற மயக்கமும் ஒரு மனிதனின் முன்னேற்றத்தைத் தடுத்து விடும். அதன்படி நான் தோல்வி அடைந்த போது வாடவும் இல்லை. இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. இனி நான் ஆடப்போவதும் இல்லை. எப்பொழுதும் சமநிலையில் தான் இருப்பேன்.

எனது வாழ்க்கைக்கான தொடக்கம் இந்த மேடையில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கமல் சார் எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினார்.” என்று கூறினார்.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: அவரைக்காய் பிரியாணி!

டெல்லி செல்லும் ரயில்களில் பார்சல் சேவை நிறுத்தம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.