பிக் பாஸ் சீசன் 8: வீட்டாரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

சினிமா டிரெண்டிங்

இந்த சீசனின் முதல் எவிக்‌ஷன் தான் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் நேற்று முதலே பகிரப்பட்டு வந்தது. ஆக, இந்த முதல் எவிக்‌ஷன் சரியானது அல்ல என பல கருத்துகள் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அந்த ஒட்டுமொத்த வீட்டில் கண்டெண்ட் தரும் ஒரே நபர் ரவீந்தர் தான். அவரையும் வெளியே அனுப்பி விட்டால் இந்த போரிங் சீசனில் எதைத் தான் விமர்சித்து எழுதுவது எனத் தெரியவில்லை. சரி,  பிக் பாஸ் வழக்கமான வீட்டின் கேப்டன் பற்றிய மதிப்பீடுகளைப் பற்றிய ஹவுஸ்மேட்ஸிடம் கருத்து கேட்பதாய் தொடங்கியது இன்றைய எபிசோட்.

அது படி, இந்த வார வீட்டின் தலைவரான தர்ஷிகாவின் தலைமை குறித்து பிற ஹவுஸ்மேட்ஸ் கருத்து கூறினர். அதில், ’ ஒரு பொண்ணா இருந்தாலும் ரொம்ப தைரியமா இருந்தாங்க..’ என வி.ஜே.விஷால் பேசி முடிப்பதற்குள் ‘அந்த வாக்கியத்த அப்படி சொல்லாதீங்க’ என விசே சரி செய்த விதம் மிகச் சிறப்பு.

சிறிய இடத்தில் கூட இந்த நிகழ்ச்சியில் அரசியல் தவறுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என மிக கவனமாக உள்ளார் சேதுபதி. ‘சத்தமாக சொல்லலாம்! ஆனால் கோபமாக சொல்லக் கூடாது’ என கோபத்துக்கும் சத்தத்திற்கும் புதிய விளக்கம் கொடுக்க முயன்ற அர்ணவை நோஸ் கட் செய்த விஜய் சேதுபதி, இந்த எபிசோடிலும் பாரபட்சமின்றி அனைவரையும் வறுத்தெடுத்தார்.

குறிப்பாக, தன் மகள் போல் எனச் சொல்லப்பட்ட சாச்சனாவை இன்றைய எபிசோடில் வறுத்தெடுத்த விதமே அவரின் பாரபட்சமின்மைக்கு மிக முக்கிய காரணம். ‘ஆண்கள் அணியின் பலவீனமான ஹவுஸ்மேட்ஸை எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டு, பெண்கள் அணியின் பலவீனமான ஆட்டக்காரர்களை மட்டும் ஆண்கள் அணியிடத்து சொன்னது என்ன நியாயம்?’ என வி.சே கேட்க, திணறினார் சாச்சனா.

மேலும், ‘இவ்வளவும் பண்ணிட்டு எதுக்கு யூனிட்டி – மண்ணாங்கட்டின்னு பேசனும்’ என உடனே ட்ரிகரான சுனிதாவையும் பார்க்க முடிந்தது. இந்த ஒரு விஷயம் இனி வரும் வாரங்களில் பெண்கள் அணியினர் சாச்சனாவை நம்புவது கடினமே.

அடுத்ததாக, ஆண்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட பவித்ரா, தங்கள் அணிக்காக சரியாக விளையாடினாரா என்கிற உரையாடலை தொடங்கினார் வி.சே. இதில், பவித்ராவின் முன்னிலையில் தான் பிராங்க் திட்டமிடப்பட்டது. மேலும், அது எவிக்‌ஷனுக்காக திட்டமிடப்பட்டது. ஆக, இதை அவர் எங்கள் அணியிடத்து சொல்லாமல் இருந்தது சரி அல்ல, என்பது வீட்டின் தலைவர் தர்ஷிகாவின் கருத்து. வி.சேவும் அதே கேள்வியை பவித்ராவிடம் கேட்டார்.

அதோடு மட்டுமில்லாமல், ’உங்க வசதிக்காக எதை வேணும்னாலும் விட்டுக்கொடுக்குறீங்க. ருசியா சாப்ட தான் இங்க வந்தீங்களா..?’ என கண்டெண்ட் தராத அனைத்து ஹவுஸ்மேட்ஸையும் வி.சே கேட்ட கேள்வி பளார்.

இதைத் தொடர்ந்து வீட்டின் எவிக்‌ஷன் பிராசஸுக்கு நகர்ந்தார் விசே. இறுதியாக ரஞ்சித், ஜாக்குலின், ரவீந்தர் நாமினேஷனில் இருந்தனர். நாம் அனைவரும் அறிந்தபடி ரவீந்தரே வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர் வெளியே வந்து செய்த சம்பவங்கள் இன்றைய எபிசோடின் முக்கிய ஹைலைட். ஒவ்வொரு ஹவுஸ்மேட் பற்றியும் நெற்றியடி ஒற்றை வரிகளாய் ரவீந்தர் அடித்தது ரெவ்யூவர் ரவீந்தர் ஸ்டைல்.

ஆக, வி.சேவின் பல நேரடிக் கேள்விகள், ரவீந்தரின் நெற்றியடி விமர்சனங்கள், இதுபோக பல வெளிவராத கலவரங்கள் , என இந்த சீசனின் அடுத்த வாரத்திற்கான எல்லா களங்களும் இன்றே அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சரியாக வியூகம் வகுத்து, கண்டெண்ட் கொடுத்து இனியாவது விளையாடுவார்களா? இல்லை மீண்டும் சீரியல் கண்டெண்ட் தானா எனத் தெரியவில்லை. மொத்தத்தில் ரவீந்தரின் எவிக்‌ஷன் வீட்டில் உள்ள ஆண்களை தனிமைப்படுத்த நிறைய வாய்ப்புள்ளது. அதுகுறித்து, நாளைய எபிசோடின் விமர்சனத்தில் பார்ப்போம்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காரியாபட்டி: ரூ.2.11 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகம் திறப்பு!

பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: நாளை நாடு தழுவிய உண்ணாவிரதம்!  

பியூட்டி டிப்ஸ்: உங்களைத் தனித்துவமாகக் காட்டும் போஹோ ஸ்டைல்!

ஹெல்த் டிப்ஸ்: மூளைக்கான உழைப்பு… எத்தனை மணி நேரம் செய்யலாம்?

இஸ்ரேலின் அத்துமீறல்: இந்திய அரசு கண்டிக்கத் தயங்குவது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *