பிக்பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் வின்னர் என அழைக்கப்பட்ட சரவண விக்ரம் வெளியேறி இருக்கிறார். இறுதிவரை செல்வார் என பெரும்பாலானவர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆட்டத்தை விக்ரம் தனித்து ஆடவில்லை. அதுவே அவரின் வெளியேற்றத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 25) பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நிகழ்ந்தது. இதில் அதிகபட்சமாக 7 போட்டியாளர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தினேஷ், மாயா, நிக்ஸன், ரவீனா, மணி சந்திரா, விஷ்ணு விஜய் மற்றும் விஜய் வர்மா என முக்கியமான போட்டியாளர்கள் அனைவருமே இடம் பிடித்துள்ளனர். அர்ச்சனா, விசித்ரா, பூர்ணிமா மூவரும் எஸ்கேப் ஆகி விட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், இறுதிப்போட்டிக்கு முன்னேற போகும் அந்த டாப் 5 போட்டியாளர்கள் யாராக இருக்கக்கூடும் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன் நிகழப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது நிகழ்ந்தால் வாக்குகள் அடிப்படையில் ரவீனா, விஜய் வர்மா இருவரும் வீட்டை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு மணி சூட்கேஸும் தற்போது பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. போட்டியாளர்களில் யாரேனும் இந்த மணி சூட்கேசை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறுவார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
இந்தி பேசுபவர்கள்… வைரலாகும் வீடியோ: தயாநிதிமாறன் ரியாக்ஷன் என்ன?
சென்னை – நெல்லை வந்தே பாரத்: நாகர்கோவில் வரை நீட்டிப்பு!