பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.
இந்தியாவில் இந்தியில் தொடங்கப்பட்டு வெளியாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் ஆதரவினால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக ஆரம்பித்தது.
தமிழகத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்களை கடந்துள்ளது. இதனால் ஏழாவது சீசன் எப்போது என்ற ஆர்வம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் புரோமோவில் விரைவில் சீசன் 7 துவங்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
வீட்டுக்குள் யார் யார் செல்ல போகிறார்கள் என்ற பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்தது. இந்தசூழலில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி முதல் துவங்கும் என்று கமல்ஹாசன் புரோமோவில் தெரிவித்துள்ளார்.
முந்தைய சீசன்களை போலவே இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் பிக் பாஸ் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், ஷிவின் இருந்தனர். இதில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.
செல்வம்
“அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு” – எடப்பாடி
“அதிகாரிகல அமலாக்கத் துறையில சேர சொல்லுங்க” : அப்டேட் குமாரு