நடிகர் ஜீவா நடித்த ‘சிங்கம் புலி’ படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில், ‘அவன் இன்னும் திருந்தல மாமா’ என ஜீவா குறித்து சந்தானம் சொல்லுவார்.
மாயா – பூர்ணிமா மீண்டும் இணைந்த ஜோடிகளாக சதி திட்டங்களைத் தீட்டுவதைக் காணும் போது இந்த வசனத்தை தான் சொல்லத் தோன்றியது.
கமல்ஹாசன் எபிசோடுக்கு பின்னரும் இவர்கள் இப்படி நடந்துகொள்வது அவர்களின் எவிக்ஷனை உறுதி செய்கிறது. இன்றைய எவிக்ஷன் முறையில் ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் கூட்டு சேர்ந்து எடுத்த முடிவில் அயிஷா, விசித்ரா, விஜய் வர்மா, அக்ஷயா, நிக்ஷன், மணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
ஆனால், ’அந்த வீட்ல இருக்குறவங்கலாம் ரிவெஞ்ச் கேம்(revenge game) ஆடுறாங்க’ என மாயா சொல்லும் போது ‘கண்ணாடி சார் அது’ என சொல்லத் தோன்றியது.
இந்த எவிக்ஷனில் மிக அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் பிக் பாஸ் வீட்டாரின் கவனம் முழுதும் மாயா மீது இருந்ததால் விஷ்ணு தப்பித்து விட்டார்.
அதிக கைதட்டல் வாங்கிய பிரதீப், எவிக்ஷனிலிருந்து தப்பித்த விஷ்ணு என அனைவரின் மீதும் மாயா – பூர்ணிமா வன்மத்தில் உள்ளனர்.
சென்ற வாரம் ஸ்மால் பாஸ் வீட்டார் செய்த அராஜகத்தால், தங்களுக்கு மக்களிடத்தில் கெட்ட பெயர் வந்ததை உணர்ந்த ஹவுஸ்மேட்ஸ் இந்த வாரம் கொஞ்சம் வாலை சுருட்டி அமைதிகாக்க நினைத்தனர்.
’நீங்களே இப்படி ஆகிட்டா, எங்களுக்கு கண்டெண்ட் யாரு டா கொடுப்பா. எங்க டாஸ்க் டீமாலலாம் ஒன்னும் யோசிக்க முடியாது டா’ என்று யோசித்த ஸ்மால் பாஸ், அவர்களை கண்ஃபஷன் ரூம் அழைத்து ஏத்தி விட, ‘இனி செருப்படி வாங்க முடியாது பிக் பாஸ்’ என்கிற தொணியில் மாயா முதலில் ஜகா வாங்க, பின் ஒரு வழியாக கொஞ்சம் அராஜகம் இல்லாத அட்டாக்கை புரிய ஒப்புக்கொண்டனர் ஸ்மால் பாஸ் வீட்டார்.
மறுபக்கம், பிரதீப்பை பிக் பாஸ் வீட்டோடு துணை நிற்க இந்த வார கேப்டன் யுகேந்திரன் அழைத்தார். ஆனால், ‘இப்போ இதான் என் டீம். என் டீம நான் என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என மீண்டும் ஆடியன்ஸை கவரும் வேலையை செய்தார் பிரதீப்.
இருந்தாலும் இவர் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு. அதற்கு பிறகு வழக்கமாக வாராவாரம் நடக்கும் ஷாப்பிங்கில் இம்முறை கேப்டனும், இன்னொருவரும் மட்டுமே பங்குகொள்ள முடியுமென புதிய ரூல்ஸ் பிக் பாஸால் போடப்பட்டது.
அதுபடி, யுகேந்திரனும் அவர் தேர்வு செய்த நிக்ஷனும் செய்த ஷாப்பிங் தொகை வெறும் `14,000 மட்டுமே. அடப் பாவிங்களா இத்தனை நாளா தேவையே இல்லாம 50,000க்கு பர்சேஸ் பண்ணீங்களே டா! வீட்டை சுத்தம் செய்வது யார் என்பதை நிர்ணயிக்கும் இந்த வார டாஸ்கில் ஸ்மால் பாஸ் வீட்டார் ஜெயிக்க, அடுத்த பாத்ரூம் கழுவுவதை நிர்ணயிக்கும் டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டார் வென்றனர். ஆனால், வென்றதுக்கு பிறகு கூல் சுரேஷ் செய்த காட்டு மிராண்டி தனமான விஷயங்களை கனத்த இதயம் கொண்டவர்கள், கிரிஞ்சை (cringe) ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அந்த காட்சியை ஸ்கிப் செய்வது நன்று. இப்படியாக முடிந்தது இந்த எபிசோட். இந்த வாரம் நிச்சயம் எவிக்ஷன் உள்ளதால், அதில் மாயா அல்லது பூர்ணிமா வெளியேற நிறைய வாய்ப்புகள் உண்டு என்பது திண்ணம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
விராட் கோலியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை!
சிவகார்த்திகேயன் செய்தது மிகப்பெரிய துரோகம்: டி. இமான் குற்றச்சாட்டு!