ஏற்கனவே களமிறக்கிய ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களில் அர்ச்சனாவைத் தவிர எவரும் வீட்டிற்குள் பெரிதாக எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்து வந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைந்தது. Bigg Boss Season 7 Day 50
இதனை போக்கும் வகையில் புதிதாக ஏற்கனவே வீட்டிலிருந்து வெளியேறிய மூன்று வைல்டு கார்டு போட்டியாளர்களை மீண்டும் களத்தில் இறக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளதாக இந்த எபிசோடில் அறிவிக்கப்பட்டது. ‘என்னப்பா வீட்டுல யார் யாரோ போறாங்க, ஆனா அந்த பருத்தி மூட்டை (‘டைட்டில் வின்னர்’) மட்டும் அப்படியே இருக்கேப்பா’ என விஷ்ணுவிடம் கூல் சுரேஷ் கலாய்ப்பதாகத் தொடங்கியது நேற்றைய எபிசோட்.
மறுபக்கம், ‘அவங்க எல்லாரும் நாமினேஷன டிஸ்கஸ் பண்ணிக்கிறாங்க மேம். இது ரூல்ஸை மீறுவது இல்லையா..? இதை மட்டும் யாரும் கேட்க மாட்றாங்க’ என விசித்ராவிடம் அர்ச்சனா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.
இருந்தாலும் மாயா – பூர்ணிமா இந்த வீட்டிற்குள் மைக்கை கழட்டி விட்டு பேசுவது, நாமினேஷன் டிஸ்கசன் போன்ற பல விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதை பற்றி கமல்ஹாசன் எதுவும் கேட்காமல் இருப்பது சற்று அபத்தமாக உள்ளது என்பதே உண்மை.
மாயா – பூர்ணிமாவின் அட்டூழியங்களை விசாரிக்கும் தருணத்தில் மட்டும் நம்மவர் ஓடி ஒளிந்து வருவதை பல வாரங்களாக பார்க்க முடிகிறது என பிக் பாஸ் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள வேண்டும். அவர் ஓடவும் இல்லை. ஒழியவும் இல்லை. ’மய்யத்தில்’ இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, பிக்பாஸ் வீட்டிலிருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப 6 நபர்களை இந்த வார கேப்டன் தினேஷ் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் பூர்ணிமா, விசித்ரா, ஜோவிகா, விஷ்ணு, ’டைட்டில் வின்னர்’ சரவண விக்ரம் என ஸ்கெட்ச் போட்டு தூக்கினார் தினேஷ். அதில் பெரிதளவு யுக்தியும், அரை டீஸ்பூன் அளவு வன்மமும் தென்பட்டது.
‘நான் கேப்டனா இருந்தப்போ ஸ்ட்ராடஜி(starategy) பண்ணது தப்புன்னா, இப்போ நீங்க அதை பண்றதும் தப்பு என பூர்ணிமா தன் தேர்வை குறித்து முரண்பட்டார்.
‘நான் பண்ணா என்ன வில்லி ஆக்குறீங்க, மத்தவங்க பண்ணா மட்டும் ஆடியன்ஸ் கை தட்றாங்க’ என பெட் ரூமில் மாயாவிடமும் பூர்ணிமா புலம்பினார். அதற்கு, ‘நீங்க பண்ணப்போ கூட நாங்க எல்லாம் கை தட்னோமே’ என மாயா ஒரு உண்மையை உதிர்த்ததையும் பார்க்க முடிந்தது.
கடந்த வாரத்தில் இருந்து பூர்ணிமாவிற்குள் எழுந்து வரும் குழப்பங்களுக்கு மாயா சொன்னதே விடையாக இருக்க முடியும். மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் இமேஜிற்கும் அதான் காரணம். ஆம், மாயாவின் தவறான வழிகாட்டுதல்.
பூர்ணிமா, ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் பெட்டிப்படுக்கையை எடுத்து வைக்கும் நேரத்தில் மாயா – மணி இடையே முட்டிக்கொண்டது. கமல் சார் எபிசோடில் மாயா – பூர்ணிமாவை போட்டுக் கொடுத்த செயல் அந்த இருவர் அணியை வெகுவாக காண்டேற்றியது.
அதன் விளைவாக நடந்த இந்த சண்டையில், ‘நான் சீப்(cheap)னா நீங்க ரொம்ப சீப்(cheap) என மணி பேசியது 50 நாட்களில் இதுவே முதல்முறை. விஷ்ணுவுக்கு கிடைத்த தீபாவளி ஸ்டார்களைக் கொண்டு மாயா, அக்ஷயாவை நேரடியாக இந்த வாரம் நாமினேட் செய்தார். அதுபடி, இந்த வாரம் இரண்டு வீடுகளிலிருந்து நாமினேட் ஆனவர்கள் பூர்ணிமா, மாயா, அக்ஷயா, மணி, ரவீனா, விசித்ரா, பிராவோ.
அடுத்த ட்விஸ்ட்டை அறிவித்தார் பிக்பாஸ். வீட்டிற்குள் மூன்று வைல்டு கார்டு போட்டியாளர்கள் வரப் போகிறார்கள். அதை தடுப்பது வரவிருக்கும் டாஸ்கை நீங்கள் விளையாடுவதை பொருத்தே என அறிவித்ததும் வீட்டிற்குள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எடுத்ததும் ’ஐஷூ வந்தா நல்லா இருக்கும்’ என சொல்லிவிட்டால் நம்மை தப்பாக எண்ணிக் கொள்வார்கள் என நினைத்த நிக்ஷன், ‘யுகேந்திரன் சார் வந்தா நல்லா இருக்கும். ஐஷூ வந்தா கூட நல்லா தான் இருக்கும்’ என பூசலாக சொன்னதையும், அதை சொல்லும் போது அவர் கண்களில் தெரிந்த ஏகாந்தத்தையும் நம்மால் காண முடிந்தது ( பாவம் வெளி நிலவரம் தெரியாத பிள்ளை).
மறுபக்கம் இதை சரியாக கணித்த மாயா, ‘நிக்ஷன் ஐஷூ வரணும்னே டாஸ்கை சொதப்புவான்’ என ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் கூறினார். இந்த புதிய ட்விஸ்ட் ஹவுஸ்மேட்ஸை ஒற்றுமையாக விளையாட செய்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது. அது எப்படி இருக்கப் போகிறது என்பது டாஸ்கை பொருத்தே. Bigg Boss Season 7 Day 50
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
10 வார ஊதியம் கிடைக்காமல் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் தவிப்பு!
IND vs AUS: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!