இந்த சீசனின் 50ஆவது எபிசோடான நேற்று எண்ட்ரீ தந்த கமல் வந்ததுமே அகம் டிவி வழியே அகத்திற்குச் சென்று, 50 நாட்களை கடந்துள்ள போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். ஏறத்தாழ அரை சீசனை கடந்துள்ள அவர்களின் மனநிலை குறித்து, இத்தனை நாட்களில் அவர்கள் தெரிந்து கொண்டவைகளை குறித்தும் விசாரித்தார். Bigg Boss Season 7 Day 49
அதில், ‘இத்தனை நாள் நான் கேமுக்காக சில விஷயங்கள் செஞ்சேன். இனிமே நான் நானா இருக்கப் போறேன்’ என மாயா கூறிய விஷயம் அங்கு இருந்த விசித்ராவைப் போல் பார்க்கும் பலருக்கும் வியப்பாக இருந்திருக்கக்கூடும்.
‘நான் என் வாழ்க்கையில நிறைய ‘புல்லீஸ்(bullies)’ பார்த்திருக்கேன், ஆனா முதல்முறை இந்த வீட்ல தான் அதை எதிர்த்து நின்னேன். அது ஒரு புது அனுபவமா இருந்தது’ என அர்ச்சனா சொன்னதும், அதற்கு ஆடியன்ஸிடமிருந்து பலத்த கைதட்டல்கள் வந்ததும் பூர்ணிமாவை மிகவும் பாதித்ததை, அவருக்கு வைத்த குளோஸ் அப் ஷாட்டில் பார்க்க முடிந்தது.
இந்த சீசனில் எந்த போட்டியாளர்களுக்கு ஆடியன்ஸிடம் பலத்த கைதட்டல்கள் கிடைத்தாலும் அதை பூர்ணிமாவால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில், கைதட்டல் வாங்கும் போட்டியாளர்கள் அனைவரும் பூர்ணிமாவுக்கு எதிர் அணியில் இருப்பவர்கள்.
வெகு நாட்களாக பூர்ணிமாவிடம் இருந்து வரும் ஆதங்கம், ஒரு வகையான பயம் இன்று பெரிதாகவே வெடித்ததென்றே சொல்ல வேண்டும். அர்ச்சனாவிற்கு கிடைத்த கைதட்டல், தனக்கு முன்னாடியே நாமினேஷனிலிருந்து மணி சேவ் செய்யப்பட்டது போன்ற விஷயங்கள் பூர்ணிமாவை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. ‘நான் ஏதோ தப்பு பண்ற மாதிரி தோணுது. நான் கெட்ட பேரு வாங்கிட்டு வெளிய போக வரல’ என தனது தோழி மாயாவிடம் புலம்பினார்.
அடுத்ததாக ‘வெற்றி நடைபோடுபவர்’ – ‘வெட்டி நடைபோடுபவர்’ என இருவரை ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் தேர்ந்தெடுக்க வேண்டும் என கமல் ஒரு டாஸ்கை கொடுத்தார்.
அதில் பலர் அர்ச்சனாவை வெற்றி நடைபோடுபவர் எனவும், மாயாவை வெட்டி நடைபோடுபவர் எனவும் கூறினர். இந்த டாஸ்க்கை செய்ய வந்த பூர்ணிமா கடைசியாக கமல்ஹாசனிடமும் தனது மன உளைச்சலைக் கொட்டித் தீர்க்கத் தொடங்கினார். அதிலும், தொண்டையில் அழுகை முட்ட அவர் பேசியது அவரது இயலாமையின், புரிதலின்மையின் வெளிப்பாடாகவே பார்க்க முடிந்தது.
ஆனால், நமது ‘டைட்டில் வின்னர்’ சரவண விக்ரமை வெற்றி நடைபோடுபவர் என அந்த டாஸ்க்கில் பூர்ணிமா சொன்னது, ‘ஓ இவ்வளவு சீரியஸா இருக்கும் போது கூட பூர்ணிமாவுக்கு பெரிய காமெடி சென்ஸ் இருக்கே’ என்றே தோன்றியது. இந்த கேம் குறித்த அவரது குறுகிய பார்வையையும் உணர முடிந்தது.
‘எனக்கு இந்த கேம் புரியல சார். எல்லா ஆடியன்ஸும் அர்ச்சனாவுக்கு கை தட்றாங்க. அதை என்னால ஏத்துக்கவே முடியல’ என அப்பட்டமாக சொல்லாமல் தனது ஆதங்கத்தை கமலிடம் கொட்டித் தீர்த்ததையும், அதற்கு கமல்ஹாசனின் கலாய் பாணி பதில்களையும் பார்க்க முடிந்தது.
இடைவேளையில் அர்ச்சனாவிடம், ‘இனி புல்லி(bully)ங்கிற வார்த்தைய சொல்லாதீங்க’ என பூர்ணிமா கேட்டுக்கொண்டது அவரது இமேஜ் குறித்த அவரது பயத்தையே அப்பட்டமாகக் காட்டியது. ’இந்த பொண்ணு இவ்வளவு அழுகுதே, பாவத்த… சேவ் ஆன விஷயத்த இப்போவே சொல்லிருவோம்’ என கமல் நினைத்து பூர்ணிமா சேவ் என சொன்னார்.
அடுத்ததாக தினேஷின் இந்த வார கேப்டன்சி, விசித்ராவின் விதிமீறல்கள் போன்ற விஷயங்கள் கமல்ஹாசனால் விசாரிக்கப்பட்டது. அதில், ‘நீங்க எப்போ ரூல்ஸ் மீறினாலும் நான் சப்போர்ட் பண்ண முடியாது. அதுல ஒரு நியாயம் இருக்கனும்’ என கமல் சொன்னது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்றே.
அதை உடனே உணர்ந்த விசித்ராவும் அர்ச்சனாவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டது ஒரு நல்ல நகர்வு. இதற்கு இடைவேளையில் ஜோவிகாவும் விசித்ராவும் முட்டிக் கொண்டது, இவர்கள் இருவருக்குமிடையேயான பனிப் போரின் அடுத்த அத்தியாயமாக இருக்கக் கூடும்.
இறுதியாக கானா பாலா, அக்ஷயா, நமது ‘டைட்டில் வின்னர்’ சரவண விக்ரம் ஆகியோர் மட்டுமே நாமினேட் ஆன லிஸ்டில் மீதம் இருந்தனர். ’இவர்களில் யார் வெளியேற்றப்படுவார் என சொல்லுங்க விஷ்ணு.
நீங்க தான் எல்லாத்தையும் கரெக்ட்டா சொல்லுவீங்களே’ என கமல் கேட்க, ‘அக்ஷயா’ என விஷ்ணு வன்மத்தில் சொல்ல, கானா பாலாவின் பெயர் போட்ட எலிமினேஷன் கார்டை கமல் நீட்டினார். போகிற போக்கில் விஷ்ணுவை ஒரு அடி அடித்துவிட்டு சென்றதாகத் தெரிந்தது.
பாவம் அவரும் கமலின் வார இறுதி எபிசோட்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நித்தம் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் இந்த வார எவிக்ஷனாக கானா பாலா வெளியேற்றப்பட்டார்.
இந்த கேமிற்கு ஏன் அவர் வைல்டு கார்டு போட்டியாளராக வர வேண்டும்? அவர் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவார்…? என்பது குறித்தெல்லாம் பிக் பாஸ் நடத்தும் எண்டமோல் நிறுவனம் ஆலோசித்ததா என்றே தெரியவில்லை. இப்படியாக நிறைவடைந்தது இன்றைய எபிசோட். Bigg Boss Season 7 Day 49
ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்