“பிக் பாஸ்” சீசன் 7: ஒரே வாசல், ஒரே கிச்சன், 2 வீடு… அலப்பறை ஆரம்பம்!

Published On:

| By Kavi

Bigg Boss Season 7

உலகநாயகன் கமலஹாசனின் பட ரிலீஸுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்குமோ… அதே அளவு எதிர்பார்ப்பு அவர் தொகுப்பாளராக தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இருக்கும். 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.

பிக் பாஸ் 7வது சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் என்பதை ப்ரோமோவிலேயே அறிவித்து விட்டனர். இன்று தொடக்க விழாவில் இந்த புது சீசனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் வீட்டின் உள்ளே சென்னை பாஷையில் ஒரு கமல் பேச, மற்றொரு கமல் மேடையில் நின்று கொண்டு அவருடன் பேச என டபுள் ஆக்க்ஷனில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விட்டார் கமல்.

இரண்டு வீடுகளையும் சுற்றிக் காட்டிய கமல் கடைசியாக ஒரு ட்விஸ்ட் வைத்தார். அது என்னவென்றால் இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து ஒரே வாசல், ஒரே கிச்சன் மட்டும் தான் இருக்கும் என கமலஹாசன் கூறினார். அதனால் பிக் பாஸ் 7 சீசனின் முதல் பிரச்சனையே இந்த கிச்சன் ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த முறை மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர்.

தற்போது பிக் பாஸ் 7வது சீசனில் நுழைந்திருக்கும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ…

1. விசித்ரா (நடிகை)
2. விஷ்ணு (சீரியல் நடிகர்)
3. வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா நடிகை)
4. சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்)
5. பவா செல்லதுரை (எழுத்தாளர்)
6. கூல் சுரேஷ் (நடிகர்)
7. ஆயிஷா உதயகுமார் (லவ் டுடே பட நடிகை)
8. ஜோவிகா (வனிதா விஜயகுமார் மகள்)
9. ஐஷு (டான்சர்)
10. பிரதீப் ஆண்டனி (அருவி, வாழ் பட நடிகர்)
11. மாயா கிருஷ்ணன் (நடிகை)
12. ரவீனா தாஹா (மௌன ராகம் 2 சீரியல் நடிகை)
13. யுகேந்திரன் (பாடகர்)
14. மணி சந்திரா
15. விஜய் வர்மா
16. அனன்யா எஸ் ராவ்
17. பூர்ணிமா ரவி ( யூடியூபர் அராத்தி )
18. நிக்சன்

ஒரே வாசல் ஒரே கிச்சன் என்ற நிபந்தனையை வைத்து பல கலவரங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடிக்க உள்ளது. இந்த மேடையை பயன்படுத்தி கமலஹாசன் சில அரசியல் கருத்துகளை பேச வாய்ப்பு உள்ளது.

இனி அடுத்த 100 நாட்களுக்கு “பிக் பாஸ்” தான்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: காணொலிக் கூட்டம்… ஸ்டாலினிடம் சிக்கிய ஏழு மாசெக்கள்

வெற்றிமாறன் கதையில் விஜய் சேதுபதி; ஆனா வேற டைரக்டர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: பதக்கம் வென்ற தமிழக வீரர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment