பிக் பாஸ்: சலசலப்பை ஏற்படுத்திய அசீமின் வெற்றி!

Published On:

| By Selvam

பிக் பாஸ் சீசன் 6-இல் அசீம் வெற்றி பெற்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி துவங்கியது. இதில் மைனா நந்தினி, ரக்சிதா, அமுதவாணன், அசீம், ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றது.

இதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ஷிவின் மூன்றாவது இடம் பிடித்திருந்தார். விக்ரமனை விட அசீம் அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் ஆனார். விக்ரமன் இரண்டாம் இடம் பிடித்தார்.

அசீமின் வெற்றியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக மக்கள் நாயகன் அசீம் என்ற ஹேஷ்டாக்கை அவர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அசீமின் வெற்றியை சிலர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பிக் பாஸ் சீசனில் அசீம் மிகவும் கோபப்படும் நபராகவும், சக போட்டியாளர்கள் மீது தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துபவராகவும் இருந்தார்.

இதனால் பல சமயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அவரை கண்டித்துள்ளார். அவரது வெற்றி தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதற்கு அசீம் ரசிகர்கள், அவர் கோபப்படுவாராக இருந்தாலும் மனதில் எதையும் வைக்காமல் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும், முதலில் சென்று உதவுபவர் அசீம் தான் என்று அவரது ரசிகர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கோவை: பெண்களுக்கு மட்டும் வாரிசு சிறப்பு காட்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share