‘அருவி’, ‘வாழ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பிரதீப் ஆண்டனி. இவரால் பெண்களுக்கு வீட்டில் பாதுகாப்பில்லை. போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மாயா கேங் கமலிடம் மல்லுக்கட்டினர்.
இதனையடுத்து வீட்டில் இருந்த அனைவரிடமும் கருத்து கேட்ட கமல், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். இந்த விவகாரம் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.
பிக் பாஸுக்கு பிறகு பிரதீப் ஆண்டனிக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. இந்தநிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக, பிரதீப் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
அதில்,”ஃபேமிலி மேன்… எனக்கெல்லாம் நடக்காதுன்னு நினைச்சேன். பரவாயில்லை என்னையும் நம்பி பொண்ணு கொடுக்குறாங்க. 90ஸ் கிட்ஸ் சாதனைகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் தனது நீண்ட நாள் காதலியை பிரதீப் விரைவில் மணமுடிக்க உள்ளார். இந்த நிச்சயதார்த்த நிகழ்வு, சிம்பிளாக நடைபெற்று முடிந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பதியில் அஜித் தரிசனம்… ரசிகர் கொடுத்த கிஃப்ட்!
ரயில் விபத்து: ஸ்பாட்டுக்கு சென்ற மத்திய ரயில்வே அமைச்சர்!