நிக்சன் தன்னை மிரட்டியதால் அவருக்கு எதிராக கமல்ஹாசனிடம் புகாரளிக்க முடிவு செய்திருப்பதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய எபிசோடில் நிக்சன், அர்ச்சனா இடையே நடைபெற்ற கடுமையான மோதலில் “சொருகிருவேன்” என்ற வார்த்தையை நிக்சன் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“வினுஷா வீட்டை விட்டு வெளியே சென்றதற்கு நிக்சன் தான் காரணம் என்று” அர்ச்சனா கூற, நிக்சன் உடனே பொங்கி எழுந்தார்.
“நான் யார்கிட்ட பேசுனா உங்களுக்கு என்ன? என் பெர்சனல்ல தலையிடாதீங்க. இவங்களோடலாம் என்னால கேம் ஆட முடியாது. வீட்டுக்கு கிளம்புறேன். சும்மா…வினுஷா…வினுஷானு பேசிட்ருக்கிங்க…இனிமே வினுஷா பத்தி பேசுனா சொருகிருவேன்” என்று ஆவேசமாக பேசினார். உடனே அங்கிருந்த விசித்ரா, நிக்சனை சமாதானப்படுத்தினார்.
தனக்கு மிரட்டல் விடுத்த நிக்சனுக்கு எதிராக கமல்ஹாசனிடம் புகாரளிக்க போவதாக தினேஷ், விஷ்ணு ஆகியோரிடம் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நிக்சனுக்கு எதிராக புகாரளிக்க அர்ச்சனா முடிவு செய்துள்ளதால், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவாரா? என்று பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…