நடிகை அனிதா சம்பத்திற்கு பெரிதாக அறிமுகம் தேவை இல்லை. சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி, பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் வைரல் ஆகினார்.
சின்னத்திரையில் இவரைப் பார்த்தவர்கள் ‘இவ்வளவு அழகான செய்தி வாசிப்பாளரா?’ என்று வியக்கும் அளவிற்கு அவரது தமிழ் உச்சரிப்பும், நேர்த்தியான ஆடை அலங்காரமும், அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்று, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
மேலும் தளபதி விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். மேலும் காலா, ஆதித்ய வர்மா, காப்பான் போன்ற படங்களில் சிறு வேடங்களில் தோன்றியுள்ளார்.
தனது நீண்ட நாள் காதலரான பிரபா என்பவரை அனிதா திருமணம் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை அனிதா சம்பத் கொடுத்த பேட்டியில், திருமணத்தின் போது தான் இருந்த ஏழ்மை நிலை பற்றி விளக்கியுள்ளார்.
அதில், “கல்யாணம் ஆகும்போது என்னிடம் பெரிதாக நகை எதுவும் இல்லை. ஒரு சவரன் கம்மல் மட்டுமே இருந்தது. அதைத்தான் திருமணத்தின் போது அணிந்திருந்தேன். நான் உழைத்த சம்பாதித்த பணத்தில் நான்கு சவரன் நகை எடுத்திருந்தேன்.
அதுவும் ஒரு சேமிப்பு மட்டும்தான். வெறும் ஐந்து சவரன் நகையுடன் தான் திருமணம் செய்தேன். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு மட்டும் தான் இருந்தது”, என்று கூறியுள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தாலும், அனிதா சம்பத் தனது கடின உழைப்பினால் அழகான சொந்த வீட்டைக் கட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரம்… யார் இந்த ஈரோடு பிரகாஷ்?
Video: சங்கடத்தில் ‘தவித்த’ பிரியாமணி… போனி கபூரை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!