சரவெடி வெடித்து கொண்டாடிய விஷ்ணு… உண்மையான காரணம் இதுதான்!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்து நான்கு நாட்கள் ஆனாலும் கூட, சமூக வலைதளங்கள் முழுக்க அதுகுறித்த பேச்சாகவே உள்ளது.

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த விஷ்ணு விஜய், சமீபத்தில் பற்ற வைத்த சரவெடி தான் ஏகப்பட்ட வெடிகள் வெடிக்கக் காரணமாக இருக்கிறது.

அதிக நட்சத்திரங்களுடன் டாப் 5 போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த விஷ்ணு, எதிர்பாராவிதமாக எவிக்ட் ஆகி வெளியேறினார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பத்தாயிரம் வாலா சரவெடி ஒன்றை அவர் பற்றவைத்து வெடித்துள்ளார். இதை எதற்காக அவர் செய்தார்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது அதற்கான விடை தெரிய வந்துள்ளது. அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மாயா டீமில் உள்ளவர்கள் தவிர வேறு யார் வென்றாலும், ”நான் பத்தாயிரம் வாலா வெடி வெடிப்பேன்” என தெரிவித்து இருந்தார்.

தற்போது அர்ச்சனா வென்றதால் தான் சொன்னதை செய்யும் முனைப்புடன், இந்த சரவெடியை அவர் வெடித்துள்ளார். அதோடு அந்த வீடியோவிலும் அவர், ”B Team” என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை வைத்துப் பார்க்கும்போது அவர் சொன்னதை செய்து காட்டியுள்ளார் என்பது தெரிகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், ”உங்களுக்கு மாயா டீம் மேல அவ்வளவு காண்டா பிரதர்” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுபுறம் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர் தினேஷ், ” சொன்ன சொல்லை தவற மாட்டான் இந்த கோட்டைச்சாமி” என இந்த போஸ்ட்டுக்கு கமெண்ட் செய்துள்ளார்.

ரசிகர்கள் மட்டுமின்றி சின்னத்திரை நட்சத்திரங்களும் விஷ்ணுவின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது : உதயநிதிக்கு வானதி பதில்!

உண்மையான GOAT: ரோஹித்தை புகழ்ந்த மும்பை வீரர்… மீண்டும் மீண்டுமா?

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *