விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ’வாரிசு’ படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்.
விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் ’வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் தில் ராஜுக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ’வாரிசு’ படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள், வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 3 முறை வாரிசு படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
இதனால் படக்குழுவினருக்கு தயாரிப்பு தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் , இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராம் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”விஜய்யுடன் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு ஒப்பனை செய்யும் விடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
’வாரிசு’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஸ்ரீகாந்த், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக வாரிசு படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிக விலைக்கு வியாபாரம் ஆன விஜய்யின் வாரிசு