விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 5 சீசனும் வெற்றிகரமாக ஒளிப்பரப்பான நிலையில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 6 வது சீசன் தொடங்க உள்ளது.
ஒவ்வொரு சீசனும் தொடங்குவதற்கு முன்பாக போட்டியாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகும். அப்படி தற்போது வெளியாகியுள்ள பட்டியல்
கலக்கப்போவது யாரு , குக் வித் கோமாளி போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் ரக்சன்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகி ராஜலட்சுமி.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா.
காளி , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்.
இசையமைப்பாளர் டி.இமானுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் அவரது முன்னாள் மனைவி மோனிகா.
ரசிகர்களால் டிடி என்று அழைக்கப்படும் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
அலைபாயுதே, கண்ட நாள் முதல் , யாரடி நீ மோகினி திரைப்படங்களில் நடித்தவரும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவருமான கார்த்தி குமார்.
கடந்த சீசனிலேயே பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து.
தமிழ் , மலையாள மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் அஜ்மல் அமீர்
ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கிரண்.தற்போது ஒரு சில படங்களில் நடித்துவருகிறார்.
விஜய் டிவி யில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமடைந்த ரோஷினி
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சத்யா தொடரில் நடிக்கும் ஆயிஷாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆம்னி பேருந்து டிக்கெட்டும் ஆபிஸ் மேனேஜரும்: அப்டேட் குமாரு
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட கெளதம் அதானி