விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் தைவானில் கடந்த 6 வாரங்களாக டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளிவந்தது மகாராஜா. திரைக்கதையும், விஜய் சேதுபதியின் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நிலையில் வசூலிலும் ரூ. 100 கோடி கடந்து சாதனை படைத்தது.
தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனையடுத்து உலகம் முழுவதும் இருந்து மகாராஜா திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும் சத்தமே இல்லாமல் இத்திரைப்படம் உலகளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி, இந்தியாவை தாண்டி பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலும் மகாராஜா திரைப்படம் அதிகளவில் பார்க்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 20 நாடுகளில் உள்ள சிறந்த 10 படங்களின் (ஆங்கிலம் அல்லாத) பட்டியலில் மகாராஜா எவ்வளவு காலம் இருக்க முடிந்தது என்பதன் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
இந்தியா: 12 வாரங்கள்
பங்களாதேஷ்: 9 வாரங்கள்
ஓமன்: 9 வாரங்கள்
பாகிஸ்தான்: 8 வாரங்கள்
இலங்கை: 7 வாரங்கள்
பஹ்ரைன்: 6 வாரங்கள்
மாலத்தீவுகள்: 6 வாரங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 6 வாரங்கள்
குவைத்: 6 வாரங்கள்
மலேசியா: 5 வாரங்கள்
நைஜீரியா: 5 வாரங்கள்
தைவான்: 5 வாரங்கள்
கத்தார்: 5 வாரங்கள்
மொரிஷியஸ்: 4 வாரங்கள்
சவுதி அரேபியா: 4 வாரங்கள்
சிங்கப்பூர்: 4 வாரங்கள்
பிலிப்பைன்ஸ்: 3 வாரங்கள்
தாய்லாந்து: 3 வாரங்கள்
இந்தோனேசியா: 2 வாரங்கள்
ஆஸ்திரேலியா: 1 வாரம்
இந்த நிலையில்,
இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் அக்டோபர் 27 வரை தொடர்ந்து ஆறு வாரங்களாக டாப் 10 இடத்தில் உள்ளது. இது இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தைவான் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீன் ட்ஸு-ஹ்சுவான் சென் இந்தப் படம் தைவான் பார்வையாளர்களால் பாராட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இந்த ஆண்டு Netflixல் அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படமாக மகாராஜா மாறியுள்ளது.
இதனையடுத்து படத்தின் இயக்குநர் நித்திலனுக்கும், நடிகர் விஜய்சேதுபதிக்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… தொடரும் போக்குவரத்து நெரிசல்!
தொடரும் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!