நகைச்சுவை திரைப்படமான ‘பெடியா’ டிரைலர் வெளியீடு!

சினிமா

பாலிவுட்டில் வருண் தவானின் 10 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக ’பெடியா’ டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று ( அக்டோபர் 19 ) வெளியிட்டனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரம்மியமான காடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் வருண் தவானுடன் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

புராண கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரை பற்றிய கதை இது.

இந்த நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன.

ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன. டிரைலரில் வருண், கீர்த்தி, தீபக் தோப்ரியல் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.

bhediya trailer varun dhawan kriti sanon horror comedy

தினேஷ் விஜன் தயாரிப்பில் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

டாப் கன் மேவ்ரிக், மோர்ட்டல் காம்பாட், காட்ஜில்லா Vs காங், மற்றும் ஆட் அஸ்திரா ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த விருது பெற்ற நிறுவனமான எம் பி சி இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது.

bhediya trailer varun dhawan kriti sanon horror comedy

டிரைலரை பற்றி இயக்குநர் அமர் கௌஷிக் கூறுகையில், “படத்தில் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும்.

திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது,” என்றார்.

தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், “குறைந்த காலத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு படத்தை தருவதற்காக மேடாக் எடுத்து கொண்ட முயற்சியே பெடியா. தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம்.

bhediya trailer varun dhawan kriti sanon horror comedy

அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். மிகுந்த திறைமைசாலியான அமர் கௌஷிக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது,” என்றார்.

பத்லாபூர் படத்தின் வெற்றிக்கு பிறகு வருண் மற்றும் தினேஷ் இணையும் படம் ‘பெடியா’ என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

‘ஸ்ரீ’ மற்றும் ‘பாலா’ படங்களுக்கு பிறகு ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் பெடியா, அமர் கௌஷிக்கின் மூன்றாவது படமாகும்.

படம் முழுவதும் சிரிப்பு மற்றும் திகில் கலந்த பயணமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்தியுள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி , தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள பெடியா நவம்பர் 25 ஆம் தேதி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தமிழகத்தில் கன மழை : மீனவர்களுக்கு எச்சரிக்கை !

சபாநாயகர் மீது குற்றச்சாட்டு : எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி !

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *