பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் – பவானி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இவர்களின் காதலர் தின புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சின்னத்திரை நடிகை பாவானி.
இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான “சின்ன தம்பி” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
தன்னுடன் இணைந்து நடித்த பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவரது கணவர் பிரதீப் குமார் கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை சின்னத்திரை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பவானி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் நடன இயக்குனரான அமீர். அவர் தன்னுடைய காதலை பவானியிடம் வெளிப்படுத்தினார்.

ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளாத பவானி ’பிக் பாஸ் ஜோடிகள் ’ நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனமாடிய போது அமீரின் காதலை ஒப்புக்கொண்டார்.
பின்னர், இவர்கள் இருவரும் சந்தோசமாக வெளியில் சுற்றும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வரும் நிலையில், தற்போது காதலர் தின புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்