பரத் நடிக்கும் கிரைம் த்ரில்லர்… தலைப்பே வித்தியாசமா இருக்கு!

சினிமா

இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பரத். அதன் பிறகு காதல் படத்தின் மூலம் ஹீரோவாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பரத் உருவாக்கி வைத்திருந்தாலும், இன்னும் அவர் எதிர்பார்க்கும் பெரிய வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

தற்போது நடிகர் பரத்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு “ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் பரத் உடன் இணைந்து அபிராமி, ராஜாஜி, பவித்ரா லக்ஷ்மி, ஷான், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார்.

கிரைம் த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பரத் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்திலும், நடிகை அபிராமி துப்புரவு பணியாளராகவும் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் பரத் ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், பட வாய்ப்பு இல்லாமல் பரத் ஆட்டோ ஓட்டுகிறார் என்ற தகவலை பரப்பப் தொடங்கிவிட்டனர். தற்போது அந்த தகவல் உண்மையில்லை அது படத்திற்காகத் தான் என்பது உறுதியாகி விட்டது.

நீண்ட காலமாக வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் பரத்திற்கு “ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” மிகப்பெரிய ப்ரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கும் விக்ரம்?.. மரண மாஸ் அறிவிப்பு!

“தமிழ்நாட்டின் கோரிக்கையை பிச்சை என்கிறார்கள்” : நெல்லையில் ராகுல் பிரச்சாரம்!

பஹத் ஃபாசிலின் ‘ஆவேசம் ‘ எப்படி இருக்கிறது? – திரைப்பட விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *