இயக்குநர் பாரதிராஜா இயக்கி சிவாஜி கணேசன், நடிகை ராதா, வடிவுக்கரசி நடிப்பில் இளையராஜா இசையில் 1985ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று வெளியான படம் ‘முதல் மரியாதை’.
இப்படம் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 67 திரையரங்குகளில் நேற்று (மார்ச் 26) வெளியிடப்பட்டது.
சென்னையில் உள்ள 12 திரைகளில் முதல் மரியாதை திரையிடப்பட்டுள்ளது. 38 வருடங்கள் கடந்த பின்னர் ரசிகர்கள் முதல் மரியாதை படத்தை எப்படி ரசித்து பார்க்கிறார்கள் என்பதை காண படத்தின் இயக்குநர் பாரதிராஜா நேற்றையதினம் சென்னையில் திரையரங்கம் ஒன்றுக்கு சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, “சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லை என்றால் இந்த பாரதிராஜா இல்லை. சிவாஜி போட்ட பிச்சைதான் இதுவரையில் நான் நடிக்க காரணம்.
இதுபோன்ற ஒரு படைப்பை நானே நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது.
படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் ராதா, சத்யராஜ், தீபன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர்.
ஒளிப்பதிவாளர் கண்ணன், இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இந்த படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்” என்றார்.
முதல் மரியாதை படத்தில் ராதா பரிசல் ஓட்டும் பெண்ணாக இருப்பார். அதேவேலை செய்யும் கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி இருக்கிறார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என பாரதிராஜாவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு,
இரண்டு கதாபாத்திரங்களும் வெவ்வேறு. இரண்டையும் ஒப்பிடுவது தவறு ஒரு கலைஞனின் படைப்பு மிகவும் முக்கியமானது. நான் இயக்குநர் மணிரத்னம் மீது மரியாதை வைத்திருப்பவன் என பதிலளித்தார்.
இராமானுஜம்
மரணப் படுக்கையில் மக்களாட்சி: சேதன் குமார் அஹிம்சா முதல் ராகுல் காந்தி வரை
அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!