நந்தினி, குந்தவை, பூங்குழலி: பாரதிராஜாவின் காதல் பேச்சு!

சினிமா

தமிழ் சினிமாவில் வாரிசு, துணிவு, வாத்தி, பத்துதல, விடுதலை படங்களை தொடர்ந்து எதிர்பார்ப்புக்குரிய படமாக மணிரத்னம் இயக்கத்தில் ‘லைகா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் – 2 உள்ளது.

முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, பரபரப்பு, வியாபார முக்கியத்துவம் இரண்டாம் பாகத்துக்கு இல்லை என்பதே வியாபார வட்டார தகவலாக உள்ளது.

பொன்னியின் செல்வன்‘ முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்தது.

கடந்த 20ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள பாடலான ‘அகநக’ பாடல் வெளியிடப்பட்டது. நேற்று (மார்ச் 29) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் ட்ரைலர், இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்துகொண்டனர்.

நேற்றைய விழாவில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மற்றும் படக்குழுவினர், தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா விழாவில் பேசுகையில், பொன்னியின் செல்வன் கதைக்கும் தமக்கும் உள்ள தொடர்பை நினைவுகூர்ந்தார்.

படத்தை பற்றி பேசுகிற போது, “நான் 9-ம் வகுப்பு படிக்கும்போதே பொன்னியின் செல்வன் கதையை படிச்சிட்டேன். இதனை எம்.ஜி.ஆர். படமாக எடுக்க ஆசைப்பட்டார். அவர் தயாரிப்பில் கமலையும், ஸ்ரீதேவியையும் நடிக்க வைத்து என்னை இயக்க சொன்னார்.

குறிப்பாக கமலை வந்தியத்தேவனாகவும், ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது நடக்காமல் போனது.

நல்ல வேளை நான் அதை எடுக்கல. எடுத்திருந்தா சொதப்பிருப்பேன் என நினைத்து தான் கடவுள் அப்படத்தை மணிரத்னத்திடம் கொடுத்து இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயின்களை லட்டு லட்டாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் மணிரத்னம்.

நந்தினி, குந்தவை, பூங்குழலி என எல்லோரையும் காதலிக்கலாம் போல. பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களுக்கு மணிரத்னம் எவ்வளவு அழகாக உயிர்கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்க கல்கி உயிரோடு இல்லாமல் போய்விட்டார்” என கலகலப்பாக பேசினார்.

இராமானுஜம்

பிரதமரிடம் வாழ்த்து பெற்ற ஆஸ்கர் இயக்குனர்!

100 நாள் வேலை திட்டம்: அதிரடி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *