best tamil film award for kadaisi vivasaiyi

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

சினிமா

மத்திய அரசால் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று (ஆகஸ்ட் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படத்திற்கான விருது நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிப்பிரிவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘கடைசி விவசாயி’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயி படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் உதம் சிறந்த இந்தி படமாகவும், செலோ ஷோ சிறந்த குஜராத்தி படமாகவும், 777 சார்லி சிறந்த கன்னட படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலை பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கருவறை ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கல்வி திரைப்படமாக ’சிற்பிகளின் சிற்பங்கள்’ படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது ஆலியா பட், கீர்த்தி சனோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறும்பட பிரிவில் ஏக் தா கவுன் என்ற படத்திற்காக பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆர் ஆர் ஆர் படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கீரவாணிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த ஸ்டண்ட், சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சிறந்த நடனம், சிறந்த தொழில் நுட்பம், சிறந்த பாப்புலர் படம் ஆகிய பிரிவுகளிலும் ஆர் ஆர் ஆர் விருதுகளை அள்ளியுள்ளது.

மோனிஷா

செஸ் உலகக் கோப்பை: பிரக்ஞானந்தா போராடி தோல்வி!

இட்லிகடை டூ இஸ்ரோ: சந்திரயான் 3 குழுவில் சாதனை இளைஞர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0