சிறந்த இயக்குனர் லோகேஷ்-சிறந்த நடிகர் சிம்பு: சைமா விருதுகள்

சினிமா

திரைத்துறையினருக்கு வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், சிறந்த நடிகருக்கன விருது நடிகர் சிம்புவுக்கும் வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் மாஸ்டர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருது வழங்கப்பட்டது.

கமல் நடிப்பில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Best Director Lokesh Best Actor Simbu Siima Awards

மேலும், நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது. படக்குழு சார்பில் ஆர்யா இவ்விருதை பெற்றுக்கொண்டார்.

Best Director Lokesh Best Actor Simbu Siima Awards

மேலும் ,சிறந்த இசையமைப்பாளருக்கான விருது , மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனுக்கும் , சிறந்த நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு ”அவுட் ஸ்டாண்டிங் ஆப் தி இயர்” விருது வழங்கப்பட்டது. ‘கர்ணன்’, ‘மண்டேலா’, ‘டாக்டர்’ என ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததால் அவருக்கு இவ்விருது கிடைத்தது.

சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வினுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘திட்டம் இரண்டு’ படத்தில் நடித்ததற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வழங்கப்பட்டது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார் கமல் : சைமா விருது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.